ஒரே நாளில் புதிய வீடு கட்டலாம்: அமெரிக்க நிறுவனம் அசத்தல்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 36 Second

201703041337120687_Mobile-3D-printer-can-build-entire-house-in-24-hours_SECVPFஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஏபிஸ் கோர் (Apis Cor) எனும் நிறுவனம் பாரம்பரிய முறையில் கட்டமைக்கப்படும் வீடுகளை அச்சடிக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. 3டி பிரின்டிங் மூலம் குறைந்த பொருட்செலவில் வீடுகளை அச்சடிக்க புதிய இயந்திரத்தை ஏபிஸ் கோர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஏபிஸ் கோர் 3டி பிரின்டிங் இயந்திரத்தின் முதல் வீடு ரஷ்யாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் நீர் வசதி, மின்சாதனம் உள்ளிட்ட சகல வசதிகளுடன் புத்தம் புதிய வீட்டை அச்சடிக்க முடியும். நான்கு அறைகள் கொண்ட வீட்டினை அச்சடிக்க 10,134 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,76,321 ரூபாய் செலவாகும் என ஏபிஸ் கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் முதல் முறையாக 3டி பிரின்ட்டர் மூலம் அச்சடிக்கப்படும் இது போன்ற வீடுகள் 175 ஆண்டுகளுக்கு தாங்கும் என்றும் அனைத்து வித வானிலைகளையும் தாங்கும். இந்த வீடு கான்கிரீட் மூலம் கட்டமைக்கப்படுகிறது. கட்டமைக்கப்படும் போதே கதவு, ஜன்னல்கள், உள்கட்டமைப்புகளை அமைப்பது மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்டவை ஒவ்வொரு கட்டங்களில் செய்யப்படுகின்றது.

வீடு கட்டும் வழிமுறையில் முதன் முறையாக அச்சடிக்கும் வழக்கம் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் வீட்டினை அச்சடிக்கும் வழக்கம் வரும் மாதங்களில் பல்வேறு மேம்படுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல ஏபிஸ் கோர் முடிவு செய்துள்ளது.

3டி முறையில் புதிய வீட்டினை அச்சடிக்க நீங்கள் தயாரா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் புகைப்படத்தை வெளியிட்ட பெண்: பாசக்கார கணவன் செய்த கொடூர செயல்..!!
Next post 15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 61 வயது முதியவர் கைது..!!