By 9 March 2017 0 Comments

குழந்தை விளையாடும் போது அருகில் வந்த ஆவி: வைரலாகும் வீடியோ..!!

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)பிரித்தானியாவில் குழந்தை விளையாடும் போது அதன் அருகில் ஆவி போன்ற உருவம் இருந்துள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Ellesmere Port நகரை சேர்ந்தவர் Jessica Lewis (26), இவருக்கு Nylah என்னும் ஒன்பது மாத குழந்தை உள்ளது.

Nylah வீட்டு தரையில் விளையாடும் போது Jessica அதை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் குழந்தையின் அருகில் வெள்ளையாக ஒரு விடயம் தோன்றியுள்ளது. முதலில் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த Jessica பின்னர் அது தனது குடும்ப நண்பரின் ஆவி என கூறியுள்ளார்.

இதுபற்றி Jessica கூறுகையில், என் குடும்ப நண்பரான ஒரு பெண்மணி போன வருடம் நான் கர்ப்பமாக இருக்கும் போது உயிரிழந்து விட்டார்.

என் குழந்தையை பார்க்க வேண்டும் என அவர் மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்து விட்டார்.

என் குழந்தை விளையாடும் போது அருகில் வந்த உருவம் அவர் ஆவி தான் என கருதுகிறேன்.

காரணம், நான் வீடியோ எடுத்த அன்று தான் இறந்த என் குடும்ப நண்பரின் நினைவு நாள் என Jessica கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam