By 8 March 2017 0 Comments

உலகக் குழப்பம்: சிவப்பு குறிப்புகள்..!! (கட்டுரை)

article_1488872696-gorgeஒரு தசாப்பத்துக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கொலையாளியால் மௌனிக்கப்படும்வரை எனது ஒரு வழிகாட்டியும் தோழருமான கேதீஷ் லோகநாதன், இந்தப் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகைக்கு, பத்தி எழுதினார்.

கேதீஷ், இன்று அரிதாகக் காணப்படும் வாய்மை, நேர்மை என்பவற்றுக்கு அமைந்து, சத்யா எனும் புனைபெயரில் எழுதினார். அறிவுபூர்வமான நேர்மை, பொதுவாகக் காணப்படும் போக்குக்கு எதிராக காணப்படும் எனது சிந்தனையை நெறிப்படுத்திய கேதீஷ், மற்றும் அவர் போல பலர்மீது செல்வாக்கு செலுத்துய இடதுசாரி மரபு மற்றும் அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு என்ற வகையில், இந்தப் பத்தியை அணுகுவேன்.

இந்த மரபில் எழுதும்போது சாதாரண மக்களின் வாழ்க்கையோடு தொடர்புறுவது தவிர்க்க முடியாதது. மேலும் இது கிராமிய மற்றும் நகர எதிர்ப்புகள் என்பவற்றையும் கருத்திலெடுக்க வேண்டியிருக்கும்.

இது அதிகாரமுடையோர், செல்வந்தர்கள், ஆட்சியாளர், அரசாங்கம் என்பவற்றை விமர்சிக்கும். மேலும், இது பால்நிலை, சாதி, இனத்துவம், வர்க்கம் என்ற வடிவங்களில் வரும் அடக்குமுறைகளை எதிர்க்கின்றது. அரச அதிகாரத்தை நெறிப்படுத்தும் அதிகாரமிக்க வர்க்கங்கள் மற்றும் ஆட்சியென்பது தேசிய மற்றும் உலக மட்டத்திலுள்ள முறைமையுடன் தொடர்புபட்டவையாகும்.

ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இணைந்துள்ள இந்த உலக முறைமை, இரண்டு உலக யுத்தங்களின் போது இருந்ததுபோல குழப்பம் மற்றும் அராஜகம் என்பவற்றை வராலாறு ரீதியாகக் கண்டுள்ளது.

சர்வதேச ஒழுங்குமுறை அவிழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில், எமது பொருளாதாரம் மற்றும் சமூகம் முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ள நாம் எங்கு செல்ல வேண்டும்?

இவ்வாறாக நெருக்கடியின்போது மீள்கட்டுமான மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கான வழிகள் எவை? எமது அரசியலமைப்பு ரீதியான அரசியல் தீர்வையும் யுத்தத்தால் விளைந்த அழிவுகளையும் கேடுகளையும் கையாள்வது எப்படி? விளிம்புநிலையில் உள்ள மக்களின் விசனங்களை கருத்திலெடுக்கவும் இங்கு வாய்ப்பு உள்ளதா?

சர்வதேசப் புலம்

எதேச்சதிகார ராஜபக்‌ஷ ஆட்சி தோற்கடிக்கப்பட்டதுடன், சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச அரங்கில் மீண்டும் நற்பெயரை மீளப்பெற முயன்றது. இதற்கு மேற்குலகுடன் உறவுகளைப் பலப்படுத்தல், சர்வதேச சட்டங்களை மதித்து நடத்தல், ஐக்கிய நாடுகள் மற்றும் அது சார்பு நிறுவனங்களைத் தழுவிக்கொள்ளல் எனும் வழிவகைகளை ஏற்று நடந்தது.

இவ்வாறான தாராண்மைவாதக் கொள்கைகளால் மேல் நாடுகளின் முதலீடு, ஏற்றுமதிகளுக்கு தடையில்லா வாய்ப்பு என்பன கிட்டும் என அரசாங்கம் நம்பியது. ஆனால், நடந்தது என்ன? இந்த சர்வதேச பொருளாதார அரசியல் கட்டமைப்புகளே வீழ்ச்சி கண்டன.

உலக பொருளாதாரம், 2008ஆம் ஆண்டின் பெருமந்தத்தைக் கடந்துவிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமை, நவதாராளவாத உலகமயமாக்கல், குடிவரவுக்கு எதிரான அலை, ஐரோப்பாவில் வளரும் இனவாத சக்திகள் என்பவற்றுக்கு எதிரான வெளிப்பாடு ஆகும். ட்ரம்ப் ஜனாதிபதியுடன், அமெரிக்காவின் முகமூடி கழன்றுவிட்டது.

குறிப்பிட்ட அளவுக்காவது உலக ஒழுங்கு, உறுதிப்பாடு என்பவற்றை பேணிய சர்வதேச ஒப்பந்தங்கள், சட்டங்கள் என்பவற்றை அமெரிக்காவின் சுரண்டல் நலன்கள் குழப்பவுள்ளன. மேலும், கடன் வழியாக ஏற்பட்ட கட்டுமானச் செழிப்பு, எல்லைக்கு வந்துவிட்டதால் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் சீனாகூட ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தலைமைகளின் பைத்தியப் போக்கை மறைப்பது கஷ்டமானது. நாம், ராஜபக்‌ஷ பற்றி கவலைப்பட்டோம். ஆனால், மேற்கத்தேய தலைவர்களின் ஜனரஞ்சகம், இனவாதம், அவரைக் கடந்துபோய்க்கொண்டுள்ளன.

ஆயினும், இந்த நாடுகளின் உயர் அலுவலர்கள், சர்வதேச கடப்பாடு உலகமயமாதலின் சிறப்பு பற்றி போதிக்கும்போது, தாராளவாத மரியாதையுடன் போலித்தனம் தொடர்கிறது. மேற்கு நாடுகளின் தலைமைகள் அருவருப்பூட்டினும், அவர்களுக்கு மிண்டு கொடுக்க ஐ.நா, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணிக்குழு ஆட்சியுள்ளது.

இந்த சர்வதேச நிறுவனங்கள், அவற்றின் இருப்புக்கான தகுதியை இழக்கும்போது, மேட்டுக்குடிக் கல்வி நிறுவனங்கள், அவற்றின் பணியை தொடர்கின்றன. இந்த நிறுவனங்களின் மேட்டுக்குடியினரால் அதே ஏகாதிபத்திய கொள்ளைகள் முன்வைக்க, அவை மரியாதையுடன் ஏற்கப்பட்டுள்ளன.

பொருளாதார ஆலோசனை

ஜூன் 2016இல், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு ஒழுக்கம் போகும் மிக முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. இது சர்வதேச நாணய நிதியம் விரிவுபடுத்திய நிதி ஏற்பாடு என்ற ஒப்பந்தம்.

இதன்படி இலங்கையின் மூலதன சந்தையினுள் கட்டுபாட்டில்லாத மூலதனப் பாயச்சலை சர்வதேச நாணய நிதியம் வற்புறுத்திய அதே மாதத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று உயர் ஆய்வாளர்கள், இவ்வாறான கொள்கைகளைக் கண்டித்து “நவதாரளவாதம்: அளவுக்கு மீறிவிட்டதா?” எனும் கட்டுரையை எழுதினார்கள்.

கிரேக்கம் உட்பட ஐரோப்பாவில் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் தோல்வி கண்ட பின்னர், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், கேள்விகளை எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். சர்வதேச நாணய நிதியம், இரண்டு நியமங்களை வைத்துள்ளது.

மேற்கு நாடுகளுக்கு ஒரு நியமமும் தெற்கு நாடுகளுக்கு இன்னொரு நியமமும் கொண்டுள்ளது. மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியும், இவ்வாறான நிதியோட்டத்தை ஊக்குவிக்கின்றது.

அது கடந்த வருடம், இலங்கையின் மூலதனச் சந்தையை விருத்தி செய்ய, 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியது. ஒரு வாரத்தின் முன்னர், 75 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, உலக வங்கியிடமிருந்து பெற்று, மூலதனச் சந்தையை மேலும் விரிவுபடுத்த, இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.

ஒரு வருடத்த்துக்கு முன்பு இந்த அரசாங்கம், ஹார்வட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான மையம் எனும் ஆலோசகரையும் வரவழைத்தது. இவர்கள் இலங்கையில் ஏற்றுமதிகளை பன்முகப்படுத்துமாறு கோருகின்றனர்.

இலங்கையில் ஏற்றுமதிகளுக்கான கேள்வி குறைந்துள்ளதையிட்டும் மேற்கு நாடுகளுடன் கடைப்பிடிக்கும் பாதுகாப்புக் கொள்கைகளையிட்டும் உலக பொருளாதார மந்தத்தையிட்டிருக்கும் விடயங்கள்பற்றி, இவை எதுவும் கூறவில்லை. இது, ஆச்சரிரியமான விடயம் அல்ல. மேட்டுக்குடி பொருளாதார நிபுணர் எவரும், உலக பொருளாதார நெருக்கடியை கணிக்கவில்லை.

விமர்சனங்களும் போராட்டங்களும்

இலங்கை அரசாங்கம், பொருளாதாரப் பிரச்சினைகள் வரும்போது சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஹார்வட் பல்கலைகழகத்திடம் ஓடுகின்றது.

ஆனால், இவை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை மோசமாக்கியுள்ளன. சாத்தியமாகக்கூடிய கிராமிய அபிவிருத்தி என்பதை நிராகரித்துவிட்டு, சிங்கப்பூர் போன்று நிதி மையமாக வருவதை, அவர்கள் பேசுகின்றனர்.

அரசியலமைப்பு மற்றும் யுத்தத்தின் பாதக விளைவுகள் என வரும்போது, மேற்கத்தேய நாடுகளையே மாதிரியாகக் கொள்கின்றனர். அதேசமயம், இலங்கையில் உருவான பல தீர்வுகளை, அலட்சியம் செய்கின்றோம்.

அரசியல் ஊசலின் மறு அந்தத்திலுள்ள கூட்டு எதிரணியும், வங்குரோத்து நிலையிலேயே உள்ளது. இவர்கள், இறைமை பற்றி அதிகம் பேசுகின்றார்கள். ஆனால், ராஜபக்‌ஷ காலத்தில்தான், அரசாங்க உத்தரவாதம் கொண்ட பிணைகள் விற்பனை தொடங்கின. சைட்டம், துறைமுக நகரம் ஆகிய பிரச்சினைகளும் இவர்களால்தான் தொடங்கப்பட்டன.

மண்ணின் மைந்தன் ராஜபக்‌ஷ, ஏன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பேச விழுந்தடிக்க வேண்டும்? நாம், தெற்கு மற்றும் வடக்கிலுள்ள பைத்திய தேசியவாதிகளிடம் நாட்டை விடுவோமாயின், எமது நாட்டின் துன்பகரமான வரலாறாகிவிட்ட துருவப்படுத்தப்பட்ட சேற்றுக்குழியிலும், மேலும் புதைந்து போவோம்.

உலகக் குழப்பம் காணப்படும் இவ்வேளையில், நாம் தீர்வுகளுக்கு மேற்குலகை நாடும் மனப்பாங்கை விட்டு விலக வேண்டும். நாம் எமது நாட்டை போன்ற வேறு நாடுகளிலிருந்து பாடம் படித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக நாம், எமது மக்களின் எதிர்ப்புகளைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நாம், அவர்களின் நிலம் மற்றும் வீடு, நிலைத்திருக்கக்கூடிய விவசாயம், மீன்பிடி, இலவச வைத்தியக் கவனிப்பு, கல்வி, ஏற்புடைய வேலை நிலைமை, நிரந்தர வேலை என்பவற்றுக்கான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.

இங்கு நான் கூறியவை, தமது துணிவான எதிர்ப்பு மூலம் பொதுமக்கள் விழையும் மாற்று முறைகள் பற்றிய படத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.Post a Comment

Protected by WP Anti Spam