அசிங்கமான மரு தொல்லையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்..!!

Read Time:5 Minute, 50 Second

faceபொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர். அவைற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை?

இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயம்
வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம். ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல்
உதிர்ந்துவிடும்.

பூண்டு
பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்க

மரு மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.

பருக்கள் வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.

சுருக்கம் வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.

சிரங்கு சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.

பூச்சிக் கடிகளுக்கு மருந்து கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெய் சிலிர்க்க வைக்கும் தொழிநுட்பத்தின் பிரம்மாண்ட படைப்பு.!! (வீடியோ)
Next post இறப்பதற்கு முன் இந்தியர் ஒருவர் எழுதியது… கண்ணீர் விட்டு அழுத பில்கேட்ஸ்..!!