By 11 March 2017 0 Comments

காதலியை எட்டித்தள்ளி கொடூரமாக தாக்கிய காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)பிரித்தானியாவில் காதலியை மாடிப்படியில் இருந்து எட்டித்தள்ளி கொடூரமாக தாக்கிய காதலனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் குடியிருந்து வரும் மார்க் பாவர் என்பவர்தான் குறித்த தாக்குதலில் ஈடுப்பட்டு தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளவர்.

குறித்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது. மட்டுமின்றி இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு சிறை தண்டனை அனுபவித்து வீடு திரும்பிய மார்க் ஒரு வார கால இடைவெளியில் மீண்டும் தமது காதலியை கொடூரமாக தாக்கி மிருகத்தனமாக நடந்து கொண்டது நீதிமன்றத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஒருமுறை கொடூரமாக தாக்கப்பட்ட பின்னரும் தம்மை ஏற்றுக்கொண்ட நபரிடத்தில் இதுபோன்ற கொடூர செயல் மன்னிக்க முடியாத குற்றம் என நீதிபதி குறித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் நிதானத்தை இழந்தமையால் 3 முறை மாடிப்படிகளில் இருந்து தமது காதலியை எட்டித்தள்ளி காயப்படுத்தியிருப்பது, அவரை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் என நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் பரிதாபமான நிலையை சுட்டிக்காட்டி பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam