பிளக்கும் மண்டை: ஏலியன்ஸ் போல் மாறி வரும் சிறுவன்: உருக வைக்கும் வீடியோ.
கம்போடியாவில் 6 வயது சிறுவன் வினோத குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மண்டையில் நான்கு அங்குல அளவுக்கு பிளவு ஏற்பட்டு தொடர்ந்து பிளவு அதிகரித்து வரும் சம்பவம் உருக வைத்துள்ளது.
6 வயதான Pheaktra Pov என்ற சிறுவனே இந்த வினோத குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து Pheaktra Povவின் தாய் 40 வயதான Srey கூறியதாவது, கர்ப்பமாகி ஏழு மாதங்களுக்கு பிறகே குழந்தை குறைபாடுடன் உள்ளது என மருத்துவர்கள் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Pheaktra Pov பிறந்த போது தலையில் சிறிய பிளவு இருந்தது, நாளடைவில் அந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதை சரி செய்ய சிகிச்சை ஏதும் இல்லை என மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்து விட்டனர் என கூறியுள்ளார்.
எனினும், Pheaktra Povவின் பாட்டி 67 வயதான Thorn Hong இதற்கு சிசிச்சை கண்டுபிடிக்க தீர்மானித்துள்ளார்.
இதற்காக, Thorn Hong வார இறுதியில் Pheaktra Povவுடன் Siem உள்ள அங்கோர் வாட் கோவில் நன்கொடைக்காக பிச்சை எடுத்து வருகிறார். அங்கு வரும் பலர் சில மருந்துகளை அளிப்பதாக Thorn Hong தெரிவித்துள்ளார்.
Pheaktra Povவின் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை மனைவியை விட்டு ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் Thorn Hong கூறியதவாது, இந்த உலகத்தில் யாராவது ஒருவர் இந்த குறைபாட்டை சரி செய்ய மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என தானும், தனது மகள் Sreyயும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Average Rating