கனடாவில் நோயாளிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் நாய்..!!

Read Time:1 Minute, 49 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கனடாவில் பிரபல மருத்துவமனையில் கிருமிகளை கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் நாயின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் வான்கூவர் பொது மருத்துவமனையில் இரண்டு வயதான Angus என்னும் பெயர் கொண்ட நாய் வேலை செய்கிறது.

Clostridium difficile என்னும் கேடு விளைவிக்கும் கிருமிகளை கண்டுப்பிடிப்பது தான் Angusன் வேலையாகும்.

இதற்காக இந்த நாய்க்கு Teresa Zurberg என்னும் மருத்துவமனை செவிலியர் ஒரு வருட பயிற்சி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், Clostridium difficile கிருமி மிக கொடிய கிருமியாகும். அது உடலில் வந்தால் மனிதனின் செரிமானத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும், பெரிய அளவில் வயிற்று போக்கையும் இது ஏற்படுத்தும்.

இந்த கிருமி எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து இருக்கலாம். இந்த மருத்துவமனையில் ஆண்டிபயாடிக் சிகிச்சை மேற்கொள்பவர்கள் மீது இந்த கிருமி பரவாமல் இருக்க Angus நாய் எங்களுக்கு பயன்படுகிறது.

இதுவரை 100க்கும் மேற்ப்பட்ட இடத்தில் இருந்த Clostridium difficile கிருமியை இந்த நாய் தன் மோப்ப சக்தியால் கண்டுபிடித்துள்ளது என கூறியுள்ளார்.

இதே வேலைக்கு தற்போது Dodger என்னும் நாய்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாபநாசத்தில் கூலி தொழிலாளி குத்திக்கொலை: கொத்தனார் கைது..!!
Next post ‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு..!! (கட்டுரை)