By 17 March 2017 0 Comments

மொட்டை தலையுடன் நடிக்க தயார்: அக்‌ஷராஹாசன்..!!

201703171944532697_Ready-to-act-with-shaved-head-Akshara-Haasan_SECVPFகமல்ஹாசன் இளைய மகள் அக்‌ஷராஹாசன் இந்தியில் நடித்த பால்கியின் ‘‌ஷமிதாப்’ படம் மூலம் நடிகை ஆனார். இப்போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறார் என்று அக்‌ஷராவிடம் கேட்டபோது…

“நான் பல்வேறு வேடங்களில் நடித்தாலும் ஒரு படத்திலாவது மொட்டை தலையுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அது போன்ற படம் எதுவும் எனக்கு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே மொட்டையடித்து நடிக்க தயாராக இருக்கிறேன்.

நான் மொட்டை அடித்துக்கொள்வது புதிது அல்ல. எனக்கு நீளமான முடி இல்லை. ஒரு நாள் அப்பாவிடம் சென்று மொட்டை தலை எப்படி இருக்கும் என்று கேட்டேன். மொட்டை தலைதானே காட்டுகிறேன் என்று கூறி, அப்பா என்னை குளியல் அறைக்கு அழைத்துச்சென்று எனக்கு மொட்டை அடித்து விட்டார். அப்போது எனக்கு வயது 7. மொட்டை அடித்தது நன்றாக இருந்தது.

அப்பாவும் நானும் இப்படி ஏதாவது செய்து கொண்டே இருப்போம்” என்றார்.

கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்பவர் கமல். அவரது மகளும் அதே ரகம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam