உதடு வெடிப்பு அதிகமா இருக்கா தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க..!!

Read Time:4 Minute, 38 Second

உதடு-வெடிப்பு-அதிகமா-இருக்கா-தேங்காய்-எண்ணெய்-யூஸ்-பண்ணுங்கஉதடு வெடிப்புகளால் எரிச்சல் ஏற்படுகிறதா? குளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. தொடங்கிவிட்ட இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா? என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா? என்ன செய்வது என்பதே புரியவில்லையா? கவலையை விடுங்கள். நமக்கு கை கொடுக்க தான் இயற்கையான பொருள் இருக்கிறது அல்லவா? என்னவென்று யோசிக்கிறீர்களா? அது தான் தேங்காய் எண்ணெய்.

அதிலுள்ள பல்வேறு வகையான உடல்நல பயன்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். தலைமுடியில் ஆரம்பித்து பாதம் வரை அதை பயன்படுத்தலாம். அது நமக்கு அளித்திடும் பல பயன்களில் ஒன்று தான் உதடு வெடிப்பிற்கான தீர்வு. பொதுவாகவே நம் உடலில் வெட்டுக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனே தேங்காய் எண்ணெய்யை அங்கே தடவ சொல்லுவார்கள். அதற்கு காரணம் அதிலுள்ள குணப்படுத்தும் ஆற்றலே. அதே தான் உதடு வெடிப்பிற்கும்! ஏற்கனவே சோதிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

உதடு வெடிப்பு ஏற்பட காரணங்கள் உங்கள் உதடுகள் வறண்டு போக தொடங்கினால், அதற்கு ஈரப்பதத்தை அளிக்கும் நேரம் வந்து விட்டது என அர்த்தமாகும். உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. முக்கியமான காரணமாக அமைவது வெப்பநிலை மாற்றங்கள் அல்லது உதட்டை அதிகமாக நக்குவதே. கடையில் வாங்கப்பட்ட பல்வேறு வகையான ஃபேன்ஸி உதடு பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தை உண்டாக்க இயற்கையான வழியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். இந்த இனிப்பான எண்ணெயில் பல விதமான கனிமங்கள் அடங்கியுள்ளது. உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்திட இது உதவுகிறது. இதனால் உங்கள் உதடுகள் மென்மையாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் ஸ்கரப் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு இந்த ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.

வெறும் தேங்காய் எண்ணெய் சில துளி எண்ணெய்யை உங்கள் உள்ளங்கையில் ஊற்றி, அதை உங்கள் விரலை கொண்டு தொட்டு எடுங்கள். உதட்டின் மீது கொஞ்சமாக அதை தடவவும். பின் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது உதடு வறண்டு போகும் போதெல்லாம் இதை செய்யலாம்.

லிப் பாம் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் ¾ டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மூடி போட்ட ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் உதட்டிற்கு எப்போதெல்லாம் நீர்ச்சத்து தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரில் இருந்து குதித்து தப்பிய பெண்..!! (வீடியோ)
Next post அப்பாவாக மாறிய அம்மா, மகளாக மாறிய மகன்..!!