முகம் முழுதும் பருக்களா இந்த 7 குறிப்புகளை உபயோகிச்சுப் பாருங்க..!!

Read Time:3 Minute, 44 Second

முகம்-முழுதும்-பருக்களா-இந்த-7-குறிப்புகளை-உபயோகிச்சுப்-பாருங்கமுகப்பருக்கள் முகத்தில் தோன்றினால், அவை முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். இருப்பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் முகத்தில் வரும் பருக்களை குறைக்க முடியும். நீங்கள் வாரம் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இவை விரைவில் பயன்தரும். சருமத்திற்கும் மேலும் அழகு சேர்க்கும்.

1. வாழைப்பழ தோல் வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவினால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளில் இருந்து விடைபெறலாம்

2.கிராம்பு கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். முதலில் கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு பின்னர் குளிர வைத்து விடவேண்டும், பிறகு அதனை எடுத்து அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

சந்தன பொடி சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவு மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவு பெறும்.
தேன் மற்றும் பால் தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து ஊற வைத்த பின்னர் பால் கொண்டு முதலில் கழுவி, அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால்,சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

8. பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்களை எளிதில் நீக்கிவிடலாம்.
ஆவி பிடித்தல்சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஆவிப்பிடித்தால், முகத்துவாரங்கள் திறந்து, அதில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம் பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்..!!
Next post இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு வயிறு வலி வந்தால் கம்பெனி பொறுப்பில்லை..!! (வீடியோ)