ஐ.நாவின் காலக்கெடுவுக்கு இரான் மதிப்பளிக்கவில்லை

Read Time:1 Minute, 55 Second

Iran.21.jpgஇரான் அணு எரிப்பொருள் தயாரிக்கும் திட்டத்தினை நிறுத்தவில்லை என்று ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி மையம் கூறியுள்ளது. அத்திட்டத்தினை நிறுத்துமாறு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பிரித்தானிய நேரம் மாலை ஐந்து மணி வரையில் ஐ.நா பாதுகாப்பு சபை காலக்கெடு விதித்து இருந்ததினையும் மீறி இரான் அணு எரிப்பொருள் தயாரிக்கும் திட்டத்தினை நிறுத்தவில்லை.

இரான் செவ்வாய்கிழமையன்று இரண்டாவது சுற்று யூரேனியம் செறிவூட்டும் பணி ஒன்றினை ஆரம்பித்து இருப்பதாக சர்வதேச அணுசக்தி மையத்தின் அறிக்கையினை மேற்கோள் காட்டி ராஜாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அணுசக்தி மையத்தின் அறிக்கையினை அடுத்து, இரான் மீது ஐ.நா பாதுகாப்பு சபை தடைகளை விதிக்கலாம்.

காலக்கெடுவிற்கு இரான் தாமதமாக பதிலளித்து இருப்பதோடு, கட்டுக்கு அடங்க மறுக்கும் வகையில் செயற்பட்டு இருப்பதாகும், இதற்கு விளைவுகள் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

முன்னதாக அமைதியான பயன்பாட்டிற்கு அணு தொழில்நுட்பம் பயன்படுத்தும் உரிமையினை இரான் விட்டு கொடுக்காது என்று இரான் அதிபர் மகமுது அஹெமெதிநிஜத் கூறியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இராக்கில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 36 பேர் சாவு
Next post ரூ.100 கோடி செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் பெண்