பாடசாலைக்கு தாமதமான மாணவன்: தந்தை என்ன செய்தார் தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:2 Minute, 7 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)உக்ரைன் நாட்டில் சிறுவன் ஒருவன் பாடசாலைக்கு தாமதமானதால் அவரது தந்தை ஹெலிகொப்டரில் கொண்டு சேர்த்த சம்பவம் பார்வையாளர்களை வியப்படைய வைத்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கியெவ் பகுதியில் குறித்த வியக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திடீரென்று குறிப்பிட்ட பாடசாலையின் அருகாமையில் Robinson R22 Beta வகை ஹெலிகொப்டர் ஒன்று தரையிறங்கவும், அதில் இருந்து சிறுவன் ஒருவன் வெளியேறி பாடசாலைக்குள் விரைவதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மட்டுமின்றி அப்பகுதி மக்கள் உடனடியாக குறித்த காட்சிகளை வீடியோவாகவும் பதிந்துள்ளனர்.

இதனிடையே பரபரப்பான அந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதில், அந்த மாணவன் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் மகன் எனவும், பாடசாலைக்கு தாமதமாக வேண்டாம் எனற நல்லெண்ணத்திலும் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்கவுமே ஹெலிகொப்டரில் சிறுவனை பாடசாலைக்கு கொண்டு சேர்த்ததாக தெரிய வந்துள்ளது.

ஆனால் குறித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சிலர், சிறுவனின் பழக்கவழக்கங்களை இச்செயல் கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் விமர்சித்துள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் வெறும் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டது எனவும் இத்தனை விவாதப்பொருளாக மாற்ற தேவையில்லை எனவும் ஒருசாரார் வாதிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசித்திர வடிவில் பிறந்த ஆண் குழுந்தை..!! (படங்கள்)
Next post இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்..!!