எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!!

Read Time:5 Minute, 26 Second

எண்ணெய்-வடியாத-சருமம்-கிடைக்க-என்ன-செய்ய-வேண்டும்வெயில் காலம் வந்தாலே இன்னொரு பிரச்சனை எண்ணெய் வழியும் முகம், முகப்பரு. வழிகிற வியர்வையில இப்படி என்ணெயும் வடிந்தா எப்படி கல்லூரி,அலுவலகம் போறது என யோசனையா இருக்கா? கவலைய விடுங்க. இங்கே கொடுத்திருக்கிற டிப்ஸ் தினமும் ஃபாலோ பண்ணினா எண்ணெய் வழியாத, பளிச் முகத்தோடு வெயிலில் போகலாம். நமது சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அது, சருமத்தின் உள்ளே செல்லும் அழுக்குகளை வெளியேற்றும் பணியினை செய்யும்.

சுற்றுப் புறச் சூழலாலும், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உண்வுகளை உண்பதாலும் , எண்ணெய் சுரப்பு அதிகமாகி, அழுக்குகளை வெளியேற்ற வேண்டிய எண்ணையே அழுக்குகளை உண்டாக்கும். இதனால் முகப்பரு, கரும்புள்ளி, என பிரச்சனைகள் தோன்றி முகத்தின் இயற்கைத் தன்மையை பாதிக்கும். இதிலிருந்து விடுபட இங்கே பல இயற்கையான வழிகளை கொடுத்திருக்கிறோம். அதனை பின்பற்றினால், நாள் முழுவதும் முகத்தில் எண்ணெய் வடியாது. பக்க விளைவுகளற்றது.

முட்டையின் வெள்ளைக் கரு : முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதில் சிறிதுன் கடலை மாவு சேர்த்து நன்ராக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தேய்த்து, காய்ந்ததும் கழுவவும். தினமும் மாலை வேளையில் செய்யலாம். மறு நாள் எண்ணெய் வடியாது.

எலுமிச்சை சாறு : 2 ஸ்பூன் நீருடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தேயுங்கள். காய்ந்தவுடன் கழுவவும். இது சருமத்தில் உருவாகும் எண்ணெயை கட்டுப்படுத்து. எலுமிச்சை சாற்றினை நீர்த்த திரவமாய் உபயோகப்படுத்துவதால், அது சருமத்திற்கு எரிச்சல் தராது. சுருக்கங்களும் போகும். எலுமிச்சை சாறினை நேரடியாக பயன்படுத்த வேண்டாம்.

யோகார்ட், தேன் : ஒரு ஸ்பூன் தேனில் ஒரு ஸ்பூன் யோகார்ட் கலக்கவும். அதில் நன்றாக பொடி செய்த ஓட்ஸினை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கும். முகத்தில் முகப்பரு இருந்தாலும் அவற்றை போக்கச் செய்யும்.

தக்காளி :மலைத் தக்காளி கிடைத்தால் இன்னும் அருமையான பலன் கிடைக்கும் . சாதரண தக்காளியும் பயன்படுத்தலாம். தக்காளியுடன் சில சொட்டு இஞ்சி சாறு கலந்து முகத்தில் தேய்க்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் எண்ணெய் சருமம் இருப்பவர்கள் பலனை பெறுவார்கள். இதனை வறண்ட சருமம் இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டாம்.

பால் : தினமும் காலையில், காய்ச்சாத பாலினை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவவும். காய்ந்தபின் ஒரு பஞ்சினால், நீரில் நனைத்து, முகத்தை துடைத்தால் எல்லா அழுக்குகளும் வந்திருக்கும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனை தினமும் செய்து பாருங்கள். பால் போன்ற முகம் கிடைப்பது உறுதி.
க்ளே மாஸ்க் : முல்தானி மட்டி அல்லது வேற ஏதாவது, முகத்தில் போடும் க்ளே வாங்கி பயன்படுத்தலாம். முல்தானி மட்டியுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மற்றும் பாதாம் போன்ற வாசனை எண்ணெயை கலந்து முகத்தில் போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். எண்ணெய் பசை போவதோடு, முகத்திற்கும் நிறம் அளிக்கும்.

மாம்பழ மாஸ்க் : உங்களுக்கு ஒட்டிய கன்னங்கள் இருந்தாலும் இந்த மாம்பழ பேக் உங்கள் கன்னத்தை சட்ரு பூசியபடி காண்பிக்கும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தேய்த்து, காய்ந்ததும் கழுவலாம். என்ணெய் வழியாது. முகமும் பளபளப்பாக இருக்கும். மேலே கூறியிருக்கும் அனைத்து வழிகளும் உங்கள் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசி வழங்கிய நேரத்தில் போப் ஆண்டவரின் குல்லாவை பறித்த குழந்தை..!! (வீடியோ)
Next post சிறுத்தையிடம் சண்டையிட்டு 3 வயது குழந்தையை காப்பாற்றிய தாய்..!!