ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்..!!

Read Time:3 Minute, 8 Second

201703241729520957_After-Antony-Editor-Don-Bosco-turns-director_SECVPFஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர் டான் போஸ்கோ.

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எடிட்டராக பலரின் கவனத்தை ஈர்த்த டான் போஸ்கோ, தற்போது இயக்குனராக மேலும் பலரின் கவனத்தையும் ஈர்க்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.

இதுகுறித்து டான் போஸ்கோ கூறும்போது, நான் முதலில் ‘உதவி’ என்ற குறும்படத்தை இயக்கினேன். அதுதான் எனக்கு சிறந்த புத்துணர்ச்சியை கொடுத்தது. யாரிடமும் உதவி எடிட்டராக பணியாற்றாமல் எடிட்டிங் கற்றுக் கொண்டு சினிமா உலகில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு எடிட்டர் என்ற அடையாளம் கொடுத்தது ‘சுந்தரபாண்டியன்’ படம். முதல் படமே பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்தது சந்தோஷம். ஆனால், பல படங்களுக்கு எடிட்டிங் செய்து வந்ததால் படம் இயக்க முடியவில்லை. அதுபோல், யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், தற்போது முழுவீச்சில் படம் இயக்கும் எண்ணத்தில் களம் இறங்கி இருக்கிறேன். இந்த புதிய படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற அடையாளம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி..!! (கட்டுரை)
Next post அவுஸ்திரேலியாவில் இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ..!!