என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்று நினைத்தேன்: ரித்திகா சிங்..!!

Read Time:2 Minute, 9 Second

201703270818538183_To-become-a-tamil-woman-and-like-to-wear-Skirt-scarf-says_SECVPFஇறுதிச் சுற்று’ படத்தில் அறிமுகமான ரித்திகா சிங் நடித்துள்ள ‘சிவலிங்கா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். இதுபற்றி கூறிய ரித்திகாசிங்…

என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்து விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் கடவுள், `இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா என்ற தேவதையை அனுப்பி என் வாழ்க்கையை மாற்றிவிட்டார். நான் இப்போது என்னை தமிழ்பெண்ணாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதற்காக, தமிழ் கற்று மற்றவர்களிடம் முடிந்த அளவு தமிழ் பேசி வருகிறேன். இப்போது, தமிழை நன்றாக புரிந்து கொள்கிறேன். நான் திக்கித் திணறி பேசுகிறேன். விரைவில் தமிழை முழுமையாக பேச கற்றுக்கொள்வேன்.

தமிழ் கலாச்சாரத்தின் மீது எனக்குபெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பழைய தமிழ் படங்கள் நிறைய பார்க்கிறேன். அதில் கிராமத்து படங்களில் வரும் பாவாடை-தாவணி அணிந்த பெண்களைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களைப் போல வாழ முடியாவிட்டாலும், சினிமாவில் பாவாடை-தாவணி அணிந்து நடிக்க விரும்புகிறேன். அந்த அளவு தமிழ் நாட்டு மக்களும், இந்த ஊரும் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

‘இறுதிச்சுற்று’ படம் என்னை தேசிய விருது வரை கொண்டு சென்றது. எனவே எனது கதை தேர்வில் கவனமாக இருக்கிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14-ம் நூற்றாண்டில் நடைமுறையிலிருந்த நம்பமுடியாத விசித்திரங்கள்..!! (வீடியோ)
Next post குறைகளை நீக்கி பேசவைக்கும் ‘குரல் மேம்பாடு’..!!