முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி..!!

Read Time:6 Minute, 16 Second

முட்டையின்-வெள்ளைக்-கருவைக்-கொண்டு-முகப்பருக்களைப்-போக்குவது-எப்படிஒவ்வொருவருக்கும் தங்களின் சருமத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் முகத்தில் ஆங்காங்கு முகப்பருக்கள் வந்துவிடும். முகப்பருக்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், அவை சருமத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் சருமத்தின் அழகு தான் பாழாகும். முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!! முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது என்றால், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அதிகப்படியான உடல் வெப்பம் மற்றும் சுத்தமின்றி இருப்பது தான்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு செய்யப்படும் மாஸ்க்குகளைப் போட்டு வந்தால், விரைவில் முகப்பருக்களைப் போக்குவதோடு, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் நீக்கவிடலாம். முகப்பரு வர ஆரம்பிச்சுடுச்சா? உடனே சமையலறைக்கு போங்க… சரி, இப்போது அந்த முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போம். அதைப் படித்து முயற்சித்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முகப்பரு அழகை கெடுக்குதா? ஈஸியா வீட்டிலேயே போக்கலாம்!!!

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் பருக்களால் அவஸ்தைப்படுவோருக்கு ஏற்றது. இதனால் பருக்கள் மட்டுமின்றி, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். இந்த மாஸ்க் செய்வதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு அடித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, முதலில் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சைஇந்த மாஸ்க் செய்ய முட்டையின் வெள்ளைக்கருவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் பருக்கள் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கிவிடும்.

மஞ்சள், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் வெள்ளைக்கரு இந்த மாஸ்க் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கும். அதற்கு ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் பட்டை ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் தேன், 2 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ பிம்பிள் மறைந்துவிடும்.

முல்தானி மெட்டி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு முல்தானி மெட்டி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, பருக்களையும் போக்க உதவும். அதற்கு முல்தானி மெட்டியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரச் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு மற்றும் ரோஸ் வாட்டர் முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்களுடன், சருமத் துளைகளில் உள்ள தூசிகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

பப்பாளி, எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளைக்கரு இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சருமத்தில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சருமத்தின் நிறமும் மேம்படும்.

சந்தனப்பொடி மற்றும் முட்டை வெள்ளைக்கரு சந்தனப்பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நீங்கி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிலில் வித்தை செய்ய மெத்தைமேல் அத்தை பொண்ணு..!!
Next post மர்ம நபர்கள் தாக்கியதில் பிரபல நடிகர் பார்வை இழக்கும் நிலையில்..!!