உதட்டுல சுருக்கமா அத எப்படி போக்கலாம் இதை ட்ரை பண்ணுங்க..!!

Read Time:6 Minute, 8 Second

உதட்டுல-சுருக்கமா-அத-எப்படி-போக்கலாம்-இதை-ட்ரை-பண்ணுங்கவயதாவதால் முகத்தில் ஏற்படும் முதல் அறிகுறி தான் உதட்டுச் சுருக்கம். இவற்றில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. ஆனால், இவை ஏற்பட்டால் இதன் அதிகப்படியான தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க இங்கே சில எளிய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைகள் அனைத்தும் நாம் அன்றாடம் நம் வீடுகளில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே செய்யச்கூடியதாகும். ஆனால், இவற்றால் அவதிபடும் பெண்கள் பலர் இதனை சரி செய்ய மருத்துவரை அணுகி சில அறுவை சிகிச்சை செய்வதே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் சரியாக தான் இருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா.

அவை வேறு சில பிரச்சனைகளையும் உண்டு செய்யலாம். எனவே நாம் வீட்டு வைத்திய முறைகளை மேற்கொண்டு சரி செய்தால் அது மிகவும் சிறந்தது தானே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகள் நம் உதடுகளில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை சீராக்குவது மட்டுமல்லாது உதடுகளில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. இங்கே கூறப்பட்டுள்ள முறைகளை தினமும் செய்து வந்தால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும். வாருங்கள் இப்போது உதட்டு சுருக்கத்தை நீக்க 10 எளிதான பாட்டி வைத்திய முறைகளை பார்ப்போம்…

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் சுருக்கங்களை நீக்குவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை உங்கள் உதட்டில் தினமும் தேய்த்து வாருங்கள். இது உங்கள் உதட்டில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சுருக்கங்களுடன் போராடி சரி செய்ய உதவுகிறது.

இலவங்கப்பட்டைப் பொடி இலவங்கப்பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து அந்தக் கலவையை உதட்டின் மீது தடவ வேண்டும். 10 நிமிடம் அதனை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இது மிக பழைய வீட்டு வைத்திய முறைகளில் உதட்டு சுருக்கத்தைப் போக்க பயன்படுத்தும் முறையாகும்.
கற்றாழை ஜெல் தினமும் 2 முறை இந்த கற்றாழை ஜெல்லை உதட்டில் சுருக்கங்கள் உள்ள இடத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேய்த்து வர வேண்டும். இது உதட்டு சுருக்கத்தை விரட்டியடிப்பதில் சிறந்து விளங்குகிறது.

வைட்டமின் ஈ எண்ணெய் வைட்டமின் ஈ எண்ணெய் காப்ஸூல்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உதட்டின் மீது தடவி 15 நிமிடம் ஏற வைக்க வேண்டும். பின்னர் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை வைத்திய முறையை தினமும் செய்து வர வேண்டும்.

ஓட்ஸ் ஓட்ஸ் உதட்டில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதில் மிகச் சிறந்து விளங்குகிறது. ஓட்ஸை ஒரு பேஸ்ட் போல சிறிது நீர் சேர்த்து கலந்து அதனை உதட்டின் மீது தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.
பப்பாளி உதட்டுகளில் சுருக்கம் இல்லாமல் காக்க உதவுவதில் பப்பாளி சிறந்து செயல்படுகிறது. இது உதட்டில் உள்ள இறந்த சரும செல்களை நீக்கி உதட்டின் அழகை மேம்படுத்துகிறது. சிறிது பப்பாளி பழத்தை எடுத்து மசித்து அதனை உதட்டின் மீது தேய்த்து 2 முதல் 3 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் உதட்டில் தேங்காய் எண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து அதனை சுத்தம் செய்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைவதுடன் அவை அடிக்கடி வராமலும் தடுத்துவிடும்.

அன்னாச்சி பழ ஜூஸ் உதட்டுச் சுருக்கத்தை விரட்டுவதில் அன்னாச்சி பழ ஜூஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஜூஸை உதட்டின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இது பழமையான முறைகளில் சிறந்த ஒன்று.

சர்க்கரை ஸ்க்ரப் எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரையை சேர்த்து அதனை உதட்டின் மீது தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும். குறிபிட்ட காலத்திற்கு இதனை தொடர்ந்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் ஒரு நாள் முழுவதும் ரோஸ் வாட்டரை உதட்டின் மீது தடவி வந்தால், உதடானது சுருக்கங்கள் இல்லாமல் அழகாகத் தெரியும். குறிப்பாக நீங்கள் தூங்கப் போவதற்கு முன் இதனை தடவி தூங்குங்கள். இரவு நேரத்தில் இது சிறப்பாக செயல்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த எட்டு இடங்களைத்தான் பெண்கள் உடம்பில் ஆண்கள் கவனிப்பார்களாம்…!!
Next post விரட்டி கடித்த சிங்கங்கள்..சர்க்கஸில் நடந்த பயங்கரம்: அதிர்ச்சி வீடியோ..!!