அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹிங்கிஸ் அதிர்ச்சி தோல்வி

Read Time:3 Minute, 43 Second

Tennis.jpgகிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடை பெற்று வருகிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் லைடன் ஹெவிட், செக்குடியரசு வீரர் ஜன்ஹேன்ரிச்சுடன் மோதி னார். இதில் ஹெவிட் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உல கின் 2-ம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வருமான நடால், லூயிசுடன் (பெரு) மோதினார். இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்து வீரர் ஸ்ரீசேப்பன், ஜரியிடம் (செக்குடியரசு) 6-7, 6-3, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

பெண்களுக்கான ஒற்றை யர் 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை அமெலி மவுரஸ்மோ, அமெரிக்காவின் சகுநெசியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் மவுரஸ்மோ எளிதாக 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து வீராங்கனை மார்ட் டினா ஹிங்கிஸ், விர்ஜினியிடம் (பிரான்சு) 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந் தார்.

மற்ற ஆட்ங்களில் டேவன் போர்ட் (அமெரிக்கா) 6-0, 6-0 என்ற செட் கணக் கில் ஜெலீனாவையும், (குரோ ஷியா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) 6-1, 6-1 என்ற கணக்கிலும் வெனியாவையும் (அமெரிக்கா), மரியா ஷரபோவா (ரஷியா) எமிலிலி யோட்டை (பிரான்சு) 6-0, 6-1 என்ற கணக்கிலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), டேனிலா ஹட்ச் னோவாவை (சுலோவேக்கியா) 7-5, 6-3 என்ற செட் கணக்கிலும் தோற்கடித்து 3-வது சுற்றில் நுழைந்தனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கணையான சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்காவிடம் 7-5, 1-6, 2-6 என்ற செட்டி கணக்கில் தோல்வி அடைந்தார். சானியா இரட்டையர் பிரிவில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஹேப்பருடன் இணைந்து ஆடினார்.

இந்த ஜோடி முதல் சுற்றில் அமெரிக்காவின் ஏஞ்சலா ஹைன்ஸ், நெகா ஓபராய், ஜோடியை 6-4, 6-0 என்ற நேர் செட்டில் தோற்கடித்தது. கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் மகேஷ்பூபதி (இந்தியா) பாலோ சுராஷ் ஜோடி 6-4, 1-6, 8-10 என்ற செட் கணக்கில் கெவின் (ஜிம்பாப்வே), அனஸ்டசியா (ரஷியா) ஜோடியிடம் தோல்வி கண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புதிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் உத்தியோகபூர்வமாக கடமையேற்கிறார்!
Next post ஒரிசாவில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன!