மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா..!!

Read Time:1 Minute, 33 Second

201704081414113313_Sri-divya-again-pair-with-adharva_SECVPFதெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. தற்போது ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே `ஈட்டி’ படத்தில் அதர்வாவுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இப்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் பர்னீஷ், `ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார்.

அதர்வா தற்போது ‘செம போதை ஆகாதே’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோர விபத்தில் கணவன் பலி – பரபரப்பு செய்தியாக தொலைக்காட்சியில் வாசித்த மனைவி..!! (வீடியோ)
Next post 8 நோயாளிகளை கொடூரமாக கொன்ற செவிலியர்?..!!