லண்டன் டூ ஈரான்: சைக்கிளில் திரில் பயணம் செய்த பெண்..!!

Read Time:3 Minute, 12 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)லண்டனிலிரிருந்து ஈரானுக்கு சைக்கிளில் பயணம் செய்த இளம் பெண் தனது பயண அனுபங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Rebecca Lowe என்னும் இளம் பெண் பிரித்தானியாவின் லண்டனில் பத்திரிக்கை துறையில் வேலை பார்த்து வருகிறார்.

Rebecca, சைக்கிளில் லண்டனிலிருந்து ஈரான் வரை பயணம் செய்து அசத்தியுள்ளார். தன் பயணத்தை பற்றி அவர் கூறுகையில், நான் பல மலைகளில் பயணம் செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்.

மலைகளில் சைக்கிளில் ஏறும் போது எனக்கு உயிர் போய் உயிர் வந்தது என Rebecca கூறுகிறார்.

துருக்கி அருகில் நான் போய் கொண்டிருந்த போது சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது. மெலிதான டயர் கொண்ட சைக்கிள் 5500 கிலோ மீற்றருக்கு பின்னர் இப்படி ஆனது.

பின்னர் சஹாரா பாலைவனம் வழியாக 40c அளவு கடும் வெயிலில் சென்றேன்.

அங்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் என் நாக்கு வரண்டது. பின்னர் அங்கிருந்த ஒரு குடும்பம் எனக்கு தண்ணீர் கொடுத்து உதவியது.

சிரியாவின் எல்லை வழியாக போகும் போது அங்கு பெய்த மழையால் அங்கிருந்த டெண்ட் வீடுகள் ஈரப்பதமாக காட்சியளித்தன.

ஒவ்வொரு வீட்டிலும் 10 பேர் தங்கியிருந்தனர்.

பின்னர் ஜோர்டன் நாட்டு வழியாக செல்லும் போது தவறான பாதையிலிருந்து விலகி மாற்று பாதையான நேர் பாதையில் நான் சென்றேன்.

பின்னர், சூடன் நாட்டு வழியாக செல்லும் போது அங்குள்ள ஒட்டக சந்தையை பார்த்தேன். அங்கு ஒட்டக கறிக்காக வாரம் இருமுறை 350 ஒட்டகங்கள் விற்கபடுகின்றன

பின்னர் அங்கு தேயிலை பறிக்கும் பெண்களை பார்த்தேன். தேயிலை கூட்டுறவில் தைரியமாக சாதனை படைத்த Awadiya Mahmoud என்னும் பெண்ணை சந்தித்தது மகிழ்சியாக இருந்தது.

தெற்கு ஈரானில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் எம்ப்ராய்டரி செய்த முகமூடியை அணிந்திருந்ததை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.

ஈரான் மலைகளில் சைக்கிளில் வந்த போது டயர் பஞ்சர் ஆனது, இன்னொரு டயரும் மோசமாக இருந்தது.

நல்லவேளையாக அங்கிருந்த ஆட்டு விவசாயிகள் எனக்கு உதவினார்கள்.

எப்படியோ என் பயணத்தை வெற்றிகரமாக முடித்து பல சுவாரசிய அனுபவங்களை கிடைக்க பெற்றேன் என புன்னகையுடன் கூறுகிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் பிரட் சாப்பிடுபவரா நீங்கள்? இதோ காத்திருக்கும் ஆபத்து..!!
Next post கரு கரு’ கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்..!!