புளூட்டோ 9-வது கிரகம்தான்: – அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப்பு

Read Time:2 Minute, 44 Second

Moon.1.jpgசூரியனை மையமாக வைத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிட்டர், சனி, யுரேனஸ், நெப்டிïன், புளூட்டோ ஆகிய 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாக வான சாஸ்திரத்தில் கூறப்பட்டது. பாடப்புத்தகங்களிலும் கூட இப்படித்தான் கூறப்பட்டது. இதில் 9-வது கிரகம் ஆன புளூட்டோ 1930-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய னில் இருந்து புளூட்டோ கிரகம் 366 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சற்றி வர 248 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் கடந்த வாரம் நடந்த சர்வதேச வான இயல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் தானா என்ற சர்ச்சை கிளப்பப்பட்டது. இந்த மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று முடிவு செய்து அறிவித்தனர். கிரகத்துக்கு உரிய தகுதிகளும் அதற்கு இல்லை என்று அந்த விஞ்ஞானிகள் அறிவித்தனர். இது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சர்வதேச வான இயல் நிபு ணர்கள் முடிவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலராடோவில் உள்ள வான இயல் விஞ்ஞானி ஆலன் ஸ்டென் கூறும்போது, “புளூட்டோ 9-வது கிரகம் அல்ல என்று முடிவு எடுக் கப்பட்டதை ஏற்க முடி யாது. புளூட்டோ 9-வது கிரகம் தான். மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவில் அரசி யல் உள்நோக்கம் உள்ளது. விஞ்ஞான ரீதியில் எடுக்கப் பட்ட முடிவு அல்ல” என்று தெரிவித்து இருக்கிறார்.

இவரது கருத்தை மேலும் 300 அமெரிக்க விஞ்ஞானிகள் ஆதரிக்கிறார்கள். இவர்கள் 300 பேரும் கையெழுத்து போட்டு சர்வதேச வான இயல் நிபுணர்கள் சங்கத்துக்கு இது தொடர்பாக மனு அனுப்பி உள்ளனர். புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்றால் பூமி உள்பட மற்ற கிரகங் களும் அதன் தகுதியை இழக்க வேண்டும். அவை வெறும் கற்கள் என்றுதான் கருத வேண்டும் என்றும் அந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈரான் நாட்டில் பயங்கர விபத்து விமானம் தீப்பிடித்து 80 பயணிகள் பலி
Next post கடற் புலிகளின் 12 படகுகள் கடற்படையினரால் நிர்மூலம்