நேரலையில் ஒளிபரப்பானது ஒட்டகச்சிவிங்கி குட்டி ஈன்ற காட்சி..!! (வீடியோ)
நியூயோர்க் நகரில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று குழந்தை பெற்றெடுப்பது நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் Harpursville என்ற கிராமத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஏப்ரல் என்ற ஒட்டகச்சிவிங்கி கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த ஒட்டகச்சிவிங்கி ஏற்கனவே 4 குட்டிகளை ஈன்றெடுத்துள்ள நிலையில், தற்போது Oliver என்ற 5 ஆவது குட்டியை ஈன்றெடுத்துள்ளது.
ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியை ஈன்றெடுக்கும் காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த காட்சியை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரலையில் பார்த்துள்ளனர்.