சாக்கு பையில் கட்டி…ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியை அடித்த கொடுமை- பதற வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 36 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)சீனாவில் சாக்கு பைக்குள் சிறுமியை அடைத்து வைத்து அடித்து உதைத்த உறவினர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

அதில், ஒரு சிறுமி சாக்கு பைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறுமியின் பாட்டி அவரை கால்களால் வேகமாக எட்டி உதைக்கிறார்.

வலியால் துடிக்கும் சிறுமி அழுகிறார், அதன் பின்னர் சிறுமியின் உறவினர் ஒருவர் அவரை கொம்பால் அடிப்பது போல வீடியோவில் உள்ளது.

மேலும், கால்களை உடைத்து விடுவேன் எனவும் அதில் சிறுமியை அவர்கள் மிரட்டுகின்றனர்.

சிறுமி ஒழுக்கமாக நடந்து கொள்ளாததால் அவரை அடித்ததாக இருவரும் கூறியுள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வேறு நாட்டில் வேலை பார்க்கிறார்கள் எனவும் அவரின் பாட்டியும், உறவு பெண்ணும் தான் சிறுமியை பராமரிக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோ பொலிசார் பார்வைக்கு சென்றதையடுத்து இருவரிடமும் பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த தேசிய விருது பெற்ற நடிகை..!!
Next post இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா..!!