ஈரான் மீது தடை விதிப்பதற்கு ரஷியா எதிர்ப்பு

Read Time:1 Minute, 27 Second

Rusia.jpgஈரான் ïரேனியத்துக்கு செறிவூட்டுவதை நிறுத்தும்படி ஐ.நா. சபை விதித்த கெடு கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த காலக்கெடுவுக்குள் அதை நிறுத்த ஈரான் முன்வரவில்லை. இதனால் அதன் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கலாம். ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடும் என்ற நிலையில் ரஷியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

சர்வதேச சர்ச்சைகளுக்கு தீர்வு காண தடைவிதிப்பது சரியான தீர்வு ஆகாது என்று ரஷியாவின் வெளிநாட்டு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் கடந்த கால அனுபவத்தை வைத்து பார்க்கும்போது இந்த மாதிரியான தடைகள் எல்லாம் பயனற்றது. பேச்சுவார்த்தைகள்தான் பயன் அளிக்குமே தவிர, தனிமைப்படுத்துவதோ,தடைவிதிப்பதோ பயன் அளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரான் ïரேனியத்தை செறிவூட்டுவதை கைவிடாதது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பழங்குடி இனத்தலைவர் பக்தி உடலை ராணுவமே அடக்கம் செய்தது உறவினர்கள் புறக்கணிப்பு
Next post நிலவின் மீது செயற்கைகோள் இன்று இரவு மோதுகிறது