By 25 April 2017 0 Comments

அஜித் ரசிகர்களின் வரவேற்பால் மிரண்டுபோன திரையரங்கம்..!!

201704251506349721_Theatre-Shocked-by-ajith-fans_SECVPFவருகிற மே 1-ந் தேதி அஜித்துக்கு பிறந்தநாள். ஆனால், அவரது ரசிகர்கள் 1 மாதத்திற்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அஜித்தின் பிறந்தநாளுக்கு போஸ்டர்கள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் பிறந்தநாளையொட்டி சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித் நடித்த 4 படங்களை 4 காட்சிகளாக திரையிட முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த 4 படங்கள் என்னவென்பதை திரையரங்கம் மிகவும் சஸ்பென்சாக வைத்துள்ளது.

அப்படியிருந்தும், இந்த 4 காட்சிகளும் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டதாம். இதனால், மிரண்டு போன திரையரங்கம் மேலும் இன்னொரு காட்சிக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருக்கலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam