ஐமேக்ஸ் திரையரங்கில் `பாகுபலி 2′ வெளியாகாது..!!

Read Time:2 Minute, 4 Second

201704251301071232_Baahubali-2-do-not-release-in-IMAX-Screens_SECVPFஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

மேலும் இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியாகும் என்று பாகுபலி படக்குழு அறிவித்திருந்தது. தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் (6K) வீடியோ வடிவில் வெளியாவது இதுவே முதல்முறை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகாது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மாறாக தெலுங்கு மற்றும் இந்தியில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

`பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக `பாகுபலி 2′ வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?..!!
Next post அந்த விஷயத்துக்காக காத்திருப்பவர்களுக்கும் அனுபவசாலிகளுக்கும் சேர்த்துதான் இது…!!