கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 21 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக செயற்படுவதற்காக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது.

குறித்த பயிற்சியை காரணமாக கொண்டு அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ். மிசிகன்’ ஏவுகணை தாங்கு நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஏற்கனேவே விமானம் தாங்கி கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முதன்மை அணி நீர் மூழ்கி கப்பலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக, மற்றொரு பாரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் கொரியா நோக்கி பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் தோன்றியுள்ள போர் பதற்றநிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் மற்றும் ஜேர்மனி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளநிலையில், தற்போது அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மாணவியை அந்த டிரைவர் செய்த காரியம் இருக்கே.?!!
Next post 1990 களின் நடிகை தேவயானி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?..!! (வீடியோ)