ஜனாதிபதியின் அழைப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் கருத்து

Read Time:2 Minute, 31 Second

SL-gl-periss.gifஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சிக்கு விடுத்துள்ள அழைப்பு காலத்திற்கேற்ற ஒரு சிறந்த முன்னேற்ற நடவடிக்கையாக இதனை நாட்டில் வாழும் அனைத்து இன சிவில் சமூகமும் வரவேற்றுள்ளனவென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியுள்ளதாவது, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.தே.க.வின் கதவு திறந்தேயுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டின் பல இடங்களிலும் பொதுக் கூட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியபோது நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் புலிகளுடன் மட்டுமல்ல சுடந்திரக்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுடனும் பேசுவேன் என்று கூறினார்.

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி லியோன் பொக்ஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐ.தே.க. தடையாக இருக்காது என உறுதி அளித்துள்ளது. இந்த நிலைப்பாட்டை ஐ.தே.க. எடுத்துள்ளது.

ஜனாதிபதி ஐ.தே.க.க்கு விடுத்த அழைப்பை கண்டி அல்வத்தை பீடாதிபதி உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனமும் தனது வரவேற்பை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் அதேவேளையில் தமது தனித்துவ அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளும் இந்தியாவில் பல கட்சிகள் நாட்டின் நன்மை கருதி பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 11 பிரபாகரன் புலி உறுப்பினர்கள் பெற்றோரிடம் கையளிப்பு
Next post சர்வாதிகாரிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்!