பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம்…!!

Read Time:3 Minute, 47 Second

lap-power-500x500சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.? அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றே அது ஒருபக்கம் இருக்கட்டும் முடியாத காரியமென்று ஏதேனும் உண்டா என்ன..? – கிடையாது.!

அப்படியாக, நீங்கள் ஒரு எளிய தந்திரம் மூலம் பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப் இயக்க முடியும். நிஜமாகத்தான். பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும் பேட்டரி மற்றும் ஏ/சி (ஆல்டர்நேட்டிவ் கரண்ட்) அடாப்ட்டர் ஆகிய இரண்டுமே அதன் ஆற்றல் மூலாதாரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுருக்கும்.

நீக்கப்பட்ட பின்பும்
ஆக ஒரு மடிக்கணினியானது அதன் பேட்டரி நீக்கப்பட்ட பின்பும் அல்லது பேட்டரி தீர்ந்த பின்னும் கூட அதனால் திறம்பட வேலை செய்ய முடியும். எனவே, நீங்கள் உங்கள் லேப்டாப்பை ஏ/சி பவர் உடன் இணைத்துக்கொள்ள முடியும்.

உறுதி
இதை நடைமுறைப்படுத்தி பார்ப்பதற்கு முன்பு நீங்கள் லேப்டாப் உடன் கிடைக்கப்பெற்ற அசல் பவர் அடாப்டரை தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வேறுபாடுகள்

ஏனெனில் மடிக்கணினியோடு கிடைக்கப் பெறாத அடாப்டர்களின் திறன்களில் வேறுபாடுகள் இருக்கும் அது உங்கள் மதர்போர்டை மிகத்தீவிரமாக சேதப்படுத்தி விடும்.

முன்னெச்சரிக்கை

பேட்டரி இல்லாமல் ஒரு மடிக்கணினி இயக்குவது மிகவும் கண்கவர் தந்திரங்களில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், அதை நிகழ்த்தும் முன்பு சில விடயங்களை நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.
எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்த வேண்டும்

நீங்கள் அதிதீவிர மின்சார சுமைகள் கொண்ட பகுதிகளில் இருப்பின் எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்துவது நல்லது. சக்தி செயலிழப்பு ஏற்பட்டால் கூட உங்கள் வேலை பாதிக்கப்படமாட்டாது.
ஒருபோதும் பவர் கோர்ட்தனை நீக்க கூடாது

உங்கள் மடிக்கணினியின் கோர்ட்’தனை எப்போதும் நீக்க கூடாது, மீறினால் அது லேப்டாப் கூறுகளை பாதிக்கும் உடன் உங்கள் லேப்டாப்பை கட்டாயமாக ஷட் டவுன் செய்யும்.
பேட்டரி தொடர்புகளை தொட கூடாது

லேப்டாப் ப்ளக்-இன் செய்யப்பட்டிருக்கும் போது பேட்டரி தொடர்புகள் எதையும் தொட கூடாது. மீறினால் பயனாளிகளுக்கு ஆபத்துகள் நேரிடலாம். ஏ/சி அடாப்டரை பயன்படுத்துவதை விட ஒரு பேட்டரியை பயன்படுத்துவதே எப்போதுமே நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தம் கேட்ட நடிகர் – கதறி அழுத நடிகை..!!
Next post இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை..!! (கட்டுரை)