வசூலில் இந்தியாவின் நம்பர்-1 இடத்தை பிடித்த ‘பாகுபலி-2’..!!

Read Time:1 Minute, 45 Second

201705041536112632_Baahubali-2-biggest-blockbuster-movie-in-indian-cinema_SECVPFஇந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28-ந் தேதி வெளிவந்த இந்த படம் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது.

விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என்ற கணிப்பில் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய படங்களிலேயே அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை ‘பாகுபலி-2’ 6 நாட்களிலேயே பெற்றுள்ளது.

‘பாகுபலி-2’ வெளியாகி இன்றோடு 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் ரூ.792 கோடி வசூலித்து இந்தியா திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமீர்கான் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிகே’ படம்தான் இதுவரை அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை கொண்டிருந்தது. அந்த படம் ரூ.743 கோடி வசூலித்திருந்தது.

தற்போது அந்த சாதனையை ‘பாகுபலி-2’ தகர்த்தெறிந்துள்ளது. ‘தங்கல்’, ‘பாகுபலி’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘தூம்-3’ ‘சுல்தான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்..!!
Next post பேஸ்புக் லைவ்வில் கதறி அழுத்து கண்ணீர் மல்க பேசிய.. ராதிகா சீரியல் நடிகை..!! (வீடியோ)