By 4 May 2017 0 Comments

பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கிய ராக்கி சாவந்த்..!!

201705041344047017_Rakki-sawant-controversial-comment-about-priyanka-chopra_SECVPFபாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு. முன்னதாக பிரதமர் மோடியின் படம் போட்ட ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா மார்க்கெட்டும் இல்லாமல் இருக்கும் இவர், அவ்வப்போது மற்ற நடிகைகளை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

அந்த வகையில், இவர் இப்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கும் பிரியங்கா சோப்ராவை பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா ‘மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார்’ என்று புது சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார்.

ராக்கி சாவந்த்தின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரியங்கா சோப்ரா தரப்பினர் ராக்கி மீது அதிருப்தியில் உள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam