சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்..!!

Read Time:1 Minute, 35 Second

201705051849559064_Vivegam-teaser-release-date-announced_SECVPFசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தேதியில் டீசரை வெளியிடவில்லை. இந்நிலையில், வருகிற மே 18-ந் தேதி ‘விவேகம்’ டீசரை வெளியிடப்போவதாக சிவா அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ டீசரை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்

அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும்விதமாக சொன்ன தேதிக்கு முன்னதாக ஒருவாரத்திற்கு முன்பே மே 11-ந் தேதியே இப்படத்தின் டீசரை வெளியிடப்போவதாக சிறுத்தை சிவா மீண்டும் அறிவித்துள்ளார். எனவே, அஜித் ரசிகர்களுக்கு ஒருவாரத்திற்கு முன்பே கொண்டாட்டம் தொடங்கவிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான ஊடகச் சூழலின் அவசியம்..!! (கட்டுரை)
Next post விவாகரத்தான ஒரு ஆணின் அறிவுரை: அனைத்து ஆண்களும் படிக்கவும்..!!