விவாகரத்தான ஒரு ஆணின் அறிவுரை: அனைத்து ஆண்களும் படிக்கவும்..!!

Read Time:3 Minute, 17 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)Gerald Rogers என்னும் உளவியலாளருக்கு சமீபத்தில் தான் 16 வருடங்களாக இணைந்து வாழ்ந்த மனைவியுடன் விவாகரத்து ஆகியுள்ளது.

இதையடுத்து Gerald தன் பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை, காதல், உறவுமுறை போன்றவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து ஆண்களுக்கும் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள அறிவுரை இதோ,

காதலை தேர்ந்தெடுங்கள்

உண்மையான காதலும், அன்பும் இருந்தால் திருமண பந்தத்தில் உள்ள சந்தோஷத்துக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் வராது. காதல் எல்லாவற்றையும் சகித்து கொள்ளும்.

பணம்

பணம் வாழ்க்கையில் முக்கியம். இணைந்து செயல்படுவதன் மூலம் பணத்தை எப்படி சம்பாதிப்பது என முடிவெடுங்கள். கணவன் மற்றும் மனைவி இருவரும் பலம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இணைந்து முன்னேற வேண்டும்

உடல் உழைப்பு இல்லையெனில் உடலின் தசைகள் வலுவிழக்கும். அது போல தான் உறவு முறையும். கணவன் மற்றும் மனைவி இணைந்து தங்கள் கனவு, திட்டம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.

வெளிப்படையாக இருங்கள்

கணவன் மனைவிக்குள் முகமூடி இருக்க கூடாது. எல்லா விடயத்திலும் ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போது தான் உண்மையான காதலை உணர முடியும்.

தவறை திருத்தி கொள்ளுங்கள்

மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். செய்த தவறிலிருந்து நம்மை திருத்தி கொள்ள வேண்டும். மீண்டும் பெரிய தவறு செய்து நம்மை முட்டாளாக நாமே முன்னிறுத்த கூடாது.

காதலித்து கொண்டே இருங்கள்.

திருமணத்துக்கு முன்னர் வர போகும் மனைவியிடம் உன்னை எப்போதும் நேசிப்பேன் என கூறியதை மறக்க கூடாது. இதை எப்போதும் தொடர வேண்டும்.

உங்கள் தேவதையின் இதயத்தை வென்று கொண்டே இருங்கள்

இதை செய்யாத பட்சத்தில் நமக்கு சொந்தமானவர்கள், அன்புக்கு ஏங்கி வேறு யாரிடமாவது அதை எதிர்ப்பார்க்கு நிலை கூட வந்து விடும் என்பதை மறவாதீர்கள்.

மனைவிக்கு தனி இடம்

சந்தோஷம் கிடைப்பதற்கு நம்மை நாமே நேசிக்க வேண்டியது அவசியமாகும். நம் மனைவிக்கு என இதயத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்.

அதில் யாரும் நுழைய கூடாது. காதல் நிரம்பி வழியும் இடத்தில் மகிழ்ச்சி கொட்டி கிடக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்..!!
Next post ரஜினிக்கு ஏற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை இயக்குவேன்: எஸ்.எஸ்.ராஜமௌலி..!!