நெருப்பு கோளமாக மாறிய விமானம்: விமான விபத்து நடந்ததெப்படி?..!! (வீடியோ)

Read Time:3 Minute, 20 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70உலகையே உலுக்கிய விமான விபத்து நடந்து 80 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர் அந்த கோர நிமிடங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த 1937 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள கடற்படை விமான தளத்தில் தரை இறங்க வேண்டிய Hindenburg விமானம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் காரணமாக தாமதித்துள்ளது.

குறித்த விமானமானது ஜேர்மனியில் இருந்து 97 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் புறப்பட்டு நியூ ஜெர்சி சென்றடைந்த நிலையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் உயிர் பிழைத்தவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் Werner Doehner கடுமையான தீக்காயங்களுடன் தப்பியவர்.

தற்போது 88 வயதாகும் Werner Doehner தமது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் ஜேர்மனியில் விடுமுறையை கழித்துவிட்டு இந்த 804 அடி நீளம் கொண்ட Hindenburg விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்.

விமானத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் சிறுவர்களுக்கு பொதுவான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்ட Hindenburg விமானம் நியூ ஜெர்சியின் Lakehurst பகுதிக்கு வந்ததும் நெருப்பு பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஹைட்ரஜன் வாயு என்பதால் நெருப்பு திடீரென்று விமானத்தின் அனைத்து பாகங்களிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிக்கொண்டது.

இதில் இரண்டாக உடைந்த Hindenburg விமானத்தின் பின்பகுதி கீழ் நோக்கி சரியவும் முகப்பு பகுதி மேல் நோக்கி எழும்பியது. இதனால் பயணிகள் பலரும் தப்பிக்கும் வாய்ப்பை பரிதாபமாக இழந்தனர்.

இதனால் கொழுந்துவிட்டெரிந்த தீயில் கருகி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பேருந்து வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர்.

Werner Doehner 3 மாத காலம் விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்தார். நியூயார்க் நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மேற்சிகிச்சை பெற்றார்.

கோர விபத்து நடந்து 80 ஆண்டுகளுக்கு பின்னர் படுகாயத்துடன் உயிர் தப்பியவர்களில் Werner Doehner மட்டும் தற்போது உயிருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியில் தேவசேனாவாகும் கார்த்திகா நாயர்..!!
Next post பொன்சேகாவுக்கு மீண்டும் இராணுவ பொறுப்பா?..!! (கட்டுரை)