By 7 May 2017 0 Comments

மாலினி ஐயராக சின்னத்திரையில் நுழைந்த ஸ்ரீதேவி..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி லேடி சூப்பர்ஸ்டாராகி கலக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இவர் கடந்த 2004ம் ஆண்டு இவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் மாலினி ஐயர் என்ற ஹிந்தி சீரியலில் பிராமணப்பெண்ணாக நடித்தார்.

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல் அதிகரித்துவிட்டதையடுத்து அந்த சீரியல் 13 வருடங்களுக்கு பிறகு வானவில் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் பிராமணப்பெண்ணான மாலினி ஐயர் ஒரு பஞ்சாபி பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள். தன் புகுந்த வீட்டுக்கு வந்ததும் கலாச்சாரமும், மொழியும் அவளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்க, அதில் இருந்து எப்படி வெளிவந்தாள் என்பதே கதை.



Post a Comment

Protected by WP Anti Spam