33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்..!!

Read Time:2 Minute, 33 Second

201705082231494408_Entire-beach-that-washed-away-30-years-ago-reappears-thanks_SECVPF.gif33 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்தில் கடுமையான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 1984 ஆம் ஆண்டு காணாமற்போன கடற்கரை, கடந்த மாதம் திடீரென தோன்றிய அதிசயம் அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள அசில் தீவிலுள்ள சிறிய கிராமமே டூவாக், இங்கு 300 மீட்டர் நீளத்தில் அழகான கடற்கரை இருந்தது.

இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்று கொண்டிருந்தனர், ஹோட்டல், சுற்றுலா விடுதிகள், கஃபே போன்றவைகளுடன் கடற்கரை அழகாக காட்சியளித்தது.

கடந்த 1984 ஆம் ஆண்டு திடீரென வசந்த கால சூறாவளி புயல் அடித்ததில் கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கடற்கரையில் உள்ள டன் கணக்கான மணல் காணாமல் போயுள்ளது.

கடற்கரையும் இருந்த இடம்தெரியாமால் போயுள்ளது, பெரிய பெரிய பாறைகள் மட்டும் இருந்துள்ளன, ஆனால் ஆங்காங்கே குளம் போன்று தண்ணீர் தேங்கி கிடந்துள்ளன இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையத் தொடங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் கடற்கரை அருகில் இருந்த ஹோட்ல், கஃபே, விடுதிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில், கடலில் வழக்கத்திற்கு மாறான அலை எழுந்துள்ள.

இந்த அலையானது, டன் கணக்கில் மணல்களை கரைக்கு கொண்டு வந்து குவிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக காணாமற்போன கடற்கரை மீண்டும் உருவாகத் தொடங்கியுள்ளது.

இந்த ஆச்சர்யமான சம்பவத்தை கண்டு அங்குள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் இந்த கடற்கரை நீண்ட ஆண்டுகளாக இப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பை விழுங்கிய மீனுக்கு ஏற்பட்ட கதி..!! (வீடியோ)
Next post சோகம்: சிறுவனை விழுங்கிய பாம்பின் வயிற்றைக் கிழித்தும் மீட்க முடியாமல் போன சோகம் நேரடி வீடியோ காட்சி..!!