டிரம்ப்-மெலானியா உறவைப்பற்றி யாரும் பேசவில்லை? பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி கேள்வி..!!
பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. பிரான்சின் மிகவும் இளைய வயதில் ஜனாதிபதியாக இருக்கிறார், இமானுவேல் மேக்ரான்(39).
அவரின் பொதுவாழ்வு மட்டுமல்ல, அவரின் தனிப்பட்ட வாழ்வும் சுவாரஸ்யங்கள் கொண்ட திருப்பங்கள் கொண்டன. அதற்கு காரணம் அவரின் மனைவி பிரிஜ்ஜெட் மேக்ரான் தான்.
பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியாகவிருக்கும் பிரிஜ்ஜெட், தற்போது புதிய ஜனாதிபதியாக இருக்கும் மேக்ரானை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஒரு நடன ஆசிரியர், மேக்ரான் ஒரு பள்ளி மாணவர். அது மட்டுமின்றி இவர்களது வயது வித்தியாசங்கள் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் சர்ச்சை எழுப்பாமல் இல்லை.
இந்நிலையில்,பிரிஜ்ஜெட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 70 வயது, அவரது மனைவிக்கு மெலானியா டிரம்பிற்கு வயது 46.
இவர்களின் திருமண உறவைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லையே. எங்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி மட்டும் ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
Average Rating