எலும்பினை பலப்படுத்த இதை சாப்பிடுங்க..!!
பொதுவாக நட்ஸ் அனைத்தும் நம் உடல்நலத்திற்கு அதிக பலன்களை தருகின்றது. இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதிலும் வால்நட்டில் சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வால்நட்டை சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடும்போது அதிக சுவை கொண்டதாக தோன்றும்.
வால்நட்டில் அதிகளவு மெலட்டினானது உள்ளது. நல்ல தூக்கத்திற்கு மெலட்டின் அவசியமாகும். இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தை தருகிறது.
வால்நட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கிறது.
பயன்கள்
இதில் உள்ள ஒமேகா 3 அமிலமானது இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.
ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது.
இதில் உள்ள ஒரு வகையான அமிலம் எலும்புகளுடன் சேர்ந்து எலும்பினை பலப்படுத்த உதவுகிறது.
ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.
விட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து விடுதலை அளித்து முடி வளர்ச்சிக்கும் உறுதி தன்மைக்கும் வழிவகுக்கிறது.
சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைத்து முதுமையை தாமதப்படுத்துகிறது.
ஆண்களுக்கு விந்தணு விற்பத்தியினை உற்பத்தியினை அதிகரிக்கிறது. வாழ்நாளை கூட்டும் தன்மை கொண்டது.
Average Rating