ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்: தாவிச் சென்று காப்பாற்றிய நபர்..!! (வீடியோ)
சீனாவில் இளம்பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது, அங்கே இருந்த ரயில்வே ஊழியர் அவரை காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கடந்த 10-ஆம் திகதி சீனாவின் பூஜியன் மாகாணத்தில் உள்ள Putian ரயில் நிலையத்தில் பலரும் ரயிலுக்காக காத்திருந்தனர். இதனால் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது பிற்பகல் நேரத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென்று வந்து கொண்டிருந்த ரயிலின் மீது குதித்து தற்கொலை செய்து கொள்வதற்காக ஓடினார்.
இதைக் கண்ட ரயில்வே ஊழியர் Weng Jianzhong(54), பாய்ந்து சென்று இளம்பெண்ணின் கைகளை பிடித்துக் கொண்டார். அப்போது இளம்பெண்ணின் கால்கள் இரயில் தண்டவாளத்தின் மேற்புறம் தொங்கியது.
இதற்கிடையில் ரயில் அருகில் வந்து விட்டது. உடனடியாக அவர் தனது கால்களால் இளம்பெண்ணின் கால்களை பிடித்து இழுத்து, ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்.
இதனால் அப்பெண்ணின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது. சிசிடிவி கமெராவில் பதிவான இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சாமர்த்தியமாக செயல்பட்டு இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் Weng Jianzhong-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Average Rating