அமெரிக்க வங்கியில் இஸ்லாமிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை: வீடியோ..!!

Read Time:2 Minute, 18 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவர் புர்காவை கழற்றாத காரணத்தினால் உடனடியாக வங்கியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் Jamela Mohamed, இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள Sound Credit Union வங்கியில் தன்னுடைய கார் சம்பந்தமாக பணம் கட்டுவதற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் முகத்தை மறைத்தபடி புர்கா அணிந்து சென்றுள்ளார். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், அவர் பிற்பகல் பிரார்த்தனை செய்வதற்காக ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் அப்படியே வந்துள்ளார்.

அவர் புர்கா அணிந்திருந்ததால், அங்கிருந்த வங்கி ஊழியர் புர்காவை கழற்றும்படி கூறியுள்ளார்.

ஆனால் இவர் கழற்ற மறுத்துவிட்டார். ஏனெனில் இவருக்கு முன்னால் வந்த இருவர் தலையில் தொப்பி அணிந்த படி வந்தனர்.

அவர்களுக்கு அனுமதி கொடுத்த நீங்கள் என்னை மட்டும் ஏன் புர்காவை கழற்ற சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

அந்த வங்கியில் தொப்பி, கண்ணாடி மற்றும் புர்கா அணிந்திருந்ததால், அதை கழற்றி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று நோட்டீஸ் வைக்கப்பட்டிருந்தது. இது பாதுகாப்புக்காகவே என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் Jamela Mohamed தன்னுடைய புர்காவை கழற்ற தவறியதால், அங்கிருந்த வங்கி ஊழியர் ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

அப்பகுதிக்கு வந்த பொலிசார் அவரை உடனடியாக வங்கியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதை Jamela Mohamed கண்ணீருடன் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் கும்பலால் கற்பழித்து, கொடூர கொலை: முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் கைது..!!
Next post ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்..!!