By 19 May 2017 0 Comments

நடுத்தர வயது ஆண்கள் பாலியல் வாழ்க்கை..!!

pic-1-350x230மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது!

இந்தியாவில், பாலியல் செயல்பாடுகள் குறித்து நாம் வெளிப்படையாக பேசுவது கிடையாது. நான்கு சுவர்களுக்குள் நடக்கும் சமாச்சாரங்கள் எப்போதும் அந்தரங்கமாகவே வைக்கப்படும். மாற்றம் மட்டுமே என்றும் மாறாதது, ஆம். இப்போது நடுத்தர வயது ஆண்களின் பாலியல் வாழ்க்கை குறித்த சில விஷயங்களை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.

பாலியல் செயல்பாடும் அது குறித்த தவறான நம்பிக்கைகளும்

பாலியல் செயல்பாடு என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடல் ரீதியான உறவாகும். முத்தமிடுதல், அணைத்தல், பாலியல் உணர்வோடு தொடுதல், சீண்டுதல் போன்ற பல வழிகளில் வெளிப்படுத்தப்படும். கடைசியில் பாலுறவில் முடிவடையும். வயது அதிகமாகும்போது, எவ்வளவு அடிக்கடி உடலுறவு கொள்கிறோம் என்பதும் குறையும். உடலுறவு என்பது உடல்ரீதியாக மகிழ்ச்சிகரமான, உணர்வு ரீதியாக திருப்தியளிக்கும் ஒரு அனுபவமாகும். குழந்தை பெற்றுக்கொள்ளுதல், ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் என்ற இரண்டு தேவைகளை அது நிறைவு செய்கிறது.

“என்றும் பதினாறு” என்பது தான் ஆண்களின் பாலியல் வலிமையை அதிகப்படுத்துவதற்கு என்று கடைகளில் கிடைக்கும் மருந்துகளின் விளம்பர வசனமாக உள்ளது! அதாவது என்றும் இளமையாக இருக்கலாம் என்று வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் கிட்டத்தட்ட இதே போன்ற வாக்குறுதிகளையே கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையோ எதிரானது! என்றும் இளமை என்பது சாத்தியமல்ல, வயது அதிகமாக அதிகமாக பாலியல் ரீதியான வலிமை படிப்படியாகக் குறைவதுதான் இயல்பு.

உங்கள் நண்பர்கள் அனுப்பும் ஆபாசப் படக் காட்சிகளில் நடிப்பவர் அந்த விஷயத்தில் அசத்துகிறாரா? அது உங்களுக்கு எழுச்சியைக் கொடுக்கலாம், நல்ல தூண்டுதலாக இருக்கலாம். ஆனால் அதை அப்படியே நீங்களும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம். வருத்தம் தான் மிஞ்சும்! பாலியல் கற்பனைக்கும் உண்மைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம் உள்ளது என்பதே உண்மை!

வயதாகும்போது என்ன ஆகிறது?

வயதாவதைத் தடுக்க முடியாது! ஆனால் வளர்ச்சி என்பது சாத்தியம், நாம் விரும்பினால்! ஆண்களின் நடுத்தர வயது எது என்பதை துல்லியமாக வரையறுத்துக் கூற முடியாது. எதையும் எதையும் நேர்மறையாகப் பார்க்கும் ஒருவருக்கு வாழ்க்கை 40 வயதில் தொடங்கலாம்! இந்த வயதில் மனதில் ஆசை இருக்கும் ஆனால் உடலோ படிப்படியாக பலம் குறைவதை சில அடையாளங்கள் உணர்த்தும். வயது அதிகரிக்க அதிகரிக்க, பாலியல் ரீதியான திருப்தி என்பதும் படிப்படியாகக் குறையக்கூடும். இனப்பெருக்கம் என்ற அடிப்படை நோக்கம் நிறைவேறிவிட்டதும் பாலியல் செயல்பாடு என்பது முற்றிலும் நின்றுவிடாது. ஆரோக்கியமான, திருப்திகரமான பாலியல் செயல்பாடு ஒருவரது வாழ்க்கை முழுதும் தொடரக்கூடும்.

ஆண்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்கள்

ஆரோக்கியம், குறைவான மன அழுத்தம், ஓரளவு நல்ல நிதி நிலைமை, இவையெல்லாமே ஆண்களின் பாலியல் திருப்தியின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. பாலியல் உறவில் விருப்பமுள்ள துணை கிடைப்பதும், தகுந்த சூழ்நிலை கிடைப்பதும்கூட முக்கியக் காரணிகள். திருமண உறவில், பாலியல் உறவு எவ்வளவு அடிக்கடி நிகழ்கிறது என்பது ஆண்டுகள் செல்லச் செல்ல, படிப்படியாகக் குறையும், ஆனால் வாழ்நாள் முழுதும் நீடிக்கும். நீரிழிவுநோய், இதயப் பிரச்சனைகள் போன்ற சில குறிப்பிட்ட நோய்களால் பாலியல் விருப்பம் பாதிக்கப்படலாம், செயல்படும் திறனும் பாதிக்கப்படலாம்.

பாலியல் சார்ந்த ஒரு நேர்மறையான அணுகுமுறை வேண்டும்

பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டு இன்பம் பெறுவது என்பது இளைஞர்களுக்கு மட்டுமே உரியதல்ல! அது நடுத்தர வயது வரையும் நீடிக்கலாம், ஏன், வாழ்நாள் முழுதும்கூட நீடிக்கலாம். பாலியல் செயல்பாடு என்பது நல்ல உறவிற்கு மிக முக்கியமாகும். அது இருவருக்குமே உடலளவில் திருப்தியளிப்பதாகவும் உணர்வு ரீதியாக நிறைவளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஆண்களுக்கு பாலியல் விழிப்புணர்வு குறைவு என்பதும், அவர்கள் தவறான பல கருத்துகளையும் நம்பிக்கைகளையும் அதீத எதிர்பார்ப்புகளையும் கொண்டிருப்பார்கள் என்பதும் உண்மை. வயதாக ஆக, பாலியல் திருப்தியில் மாற்றம் ஏற்படும். தவறான நம்பிக்கைகளையும் ஒரே மாதிரியான கருத்துகளையும் அகற்றி தெளிவு பெற, வயதான காலகட்டத்தில், பாலியல் குறித்த நேர்மறையான கண்ணோட்டம் அவசியம்.

40ஐக் கடந்த ஒருவரின் கனவுகள், ஆசைகள், கற்பனைகள்

பெண்களைவிட ஆண்கள் அடிக்கடி காமத்தைப் பற்றி யோசிப்பார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முடிவு செய்வதில் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான அம்சம்! பாலியல் ரீதியான எண்ணங்கள், கற்பனைகள், பாலியல் கிளர்ச்சி அளிக்கும் கனவுகள் எல்லாம் ஏற்படுவது சகஜம். காம எண்ணங்கள் தொடர்பான பலவந்தமான சுயக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தால் இந்த காலகட்டத்தில் அவற்றை படிப்படியாகக் கைவிடத் தொடங்குவார்கள். ஆண்களின் குணம் என்றும் மாறாது! இளமையான பெண் வேண்டும் என்ற இரகசிய ஆசை அவர்களுக்கு எப்போதும் இருக்கும்! முன்னாள் காதலியை எண்ணி அதிகம் ஏங்குவார்கள். இந்தக் கற்பனைகள், எண்ணங்களை செயலில் காட்ட வேண்டியதில்லை. அதற்கு மாறாக அவற்றின் உந்துதலையும் உணர்வையும் உங்கள் துனைவருடனான பாலியல் வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்ற வினையூக்கி போலப் பயன்படுத்தலாம். பாலியல் ரீதியாக நன்றாக செயல்பட முடியாமல் போவது அல்லது திருப்தி குறைவது போன்றவை உளவியல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாலியல் செயல்திறனை மேம்படுத்தும் வழிகளைத் தேடுவார்கள்

தாம்பத்தியத்தில் திருப்தியளிக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்கிற ஆசை எல்லா ஆண்களுக்கும் உண்டு. இது அவர்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது, இதனால் அவர்கள் அதற்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்ளுதல், பாலியல் ரீதியான செயல்திறன் அல்லது ஆசையை மேம்படுத்தும் உணவு வகைகள், அதாவது பாலியல் ஊக்கிகள் போன்றவற்றைத் தேடிச் செல்கின்றனர். இதுபோன்ற தூண்டு பொருள்களை எடுத்துக்கொள்வது நல்லதல்ல, ஏனெனில் அவை பலனளிக்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை, மேலும் அவை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதும் சந்தேகத்திற்குரிய விஷயமாக இருக்கலாம்.

பாலியல் செயல்பாட்டைப் பாதிக்கும் மருத்துவப் பிரச்சனைகள்

உடலுறவு திருப்திகரமாக இருக்கப் போதுமான நேரத்திற்கு ஆண்குறி விறைப்பாக இல்லாமல் போகும் பிரச்சனையை விறைப்பின்மை என்கிறோம். விந்து முந்துதல், அதாவது விரும்பும் நேரத்திற்கு முன்னதாகவே விந்து வெளியேறிவிடுதல் என்பதும் மற்றொரு பொதுவான பிரச்சனையாக உள்ளது, இது தம்பதியர் இருவரையுமே அதிருப்திக்கு உள்ளாக்கக்கூடிய ஒன்று.உடலுறவின்போது ஒரு ஆண் தனது துண அல்லது தான் விரும்பும் முன்பு சீக்கிரமே விந்தை வெளியிட்டுவிடும் பிரச்சனையை விந்து முந்துதல் என்கிறோம்.

இந்த பாலியல் குறைபாடுகளை வெல்வதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் கிடைக்கின்றன, நவீன மருத்துவத்திற்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்! தகுதிவாய்ந்த மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்க வேண்டும்.

மொத்தத்தில், நாற்பதைக் கடந்த ஆண்கள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வெட்கப்படத் தேவையில்லை, அவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை. நடுத்தர வயது என்பதற்காக ஆசைகளுக்குத் தடைபோடத் தேவையில்லை!Post a Comment

Protected by WP Anti Spam