புலிகளுடன் ஜெ கூட்டு, திமுக அரசை கவிழ்க்க சதி -காங். தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Read Time:3 Minute, 18 Second

Jayalalitha.1jpg.jpgவிடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரபை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதா சதி திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது வைகோவுடன் கூடடணி வைத்துள்ளார். வைகோ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இதை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஜெயலலிதாவின் இந்த செயல் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தன்று அவருடன் சேர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்த ஜெயலலிதா அன்று திடீரென வரவில்லை.

இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தம்பிதுரை விளக்குøயில், பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே தங்களது தலைவர் அந்தக் கூட்டத்திக கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.

எனவே ராஜீவ் காந்தி கொல்லப்படப் போகிறார் என்ற தகவல்¬முன்கூட்டியே ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே அதுகுறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இயக்குனர் பாரதிராஜா விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.(?) பாரதிராஜா தீவிர ஜெயலலிதா ஆதரவாளர். நெய்வேலியில் காவிரிப் பிரச்சினைக்காக திரையுலகினர் நடத்திய போராட்டத்தின்போது பாரதிராஜாவுக்கு ஜெயலலிதா தீவிர ஆதரவு கொடுத்தார். எனவே இதுவும் கவலைககுரிய விஷயம் தான் என்றார் கிருஷ்ணசாமி.

விடுதலைப் புலிகளும்திமுகவும் சேர்ந்து தான் ராஜிவைக் கொன்றதாக முன்பு பழி சுமத்தினார் ஜெயலலிதா. இப்போது அதே பழியை ஜெயலலிதா மீது சுமத்தியுள்ளார் கிருஷ்ணசாமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை கடற்படையுடன் கடும் போர் 80 விடுதலைப்புலிகள் பலி
Next post 20 ஆண்டுகால ஆட்டம் முடிவுக்கு வந்தது: கண்ணீர் விட்டபடி விடைபெற்றார் அகாசி