By 20 May 2017 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய, அந்த பெண் யார்? பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார்?? -அம்பலத்துக்கு வரும் அந்தரங்கள்- (படங்கள் & வீடியோ)

001 (7)a
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய, அந்த பெண் யார்? பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார்?? -அம்பலத்துக்கு வரும் அந்தரங்கள்- (படங்கள் & வீடியோ)

நேற்றையதினம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, “மக்கள்” எனும் போர்வையில் குழப்பியவர்கள் சுயநல அரசியல்வாதிகளால் தூண்டி விடப்பட்டவர்கள் எனவும், அவர்கள் உண்மையான நினைவேந்தல் செய்ய வந்த “பொதுமக்கள்” அல்ல என்பது, அவர்களது பேச்சுக்களிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.

முதலில் “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்” இரா சம்பந்தன் உரையாற்றிக் கொண்டு இருக்கும்போது ஊடகவியலாளர் தயாபரன் அவர்கள் ஏற்க்கனவே திட்டமிட்டபடி, அதாவது EPRLF தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனது வாகனத்தில் வரும்போது போட்ட திட்டத்தின்படி, நிகழ்வை குழப்பும் விதமாக ஒரு கேள்வியை தொடுத்தார்.

(இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பகிரங்க கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதாரத்துடன் பகிரங்கப்படுத்தி உள்ளார்.. அதன் வீடியோ இதோ…)

மேற்படி ஊடகவியலாளர் தயாபரன் அவர்கள் கேட்ட கேள்வி சரியா? இல்லையா? என்பதுக்கு அப்பால், இதனைக் கேட்கும் இடம் அதுவா?? என்பதே பொதுவான ஆதங்கம்.. அதையும் தாண்டி இவர் (ஊடகவியலாளர் தயாபரன்) அவ்விடத்தில் இந்தக் கேள்வியை முன்வைத்ததே, இந்த நிகழ்வைக் குழப்ப வேண்டுமெனும் காரணம் தான் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

மேற்படி ஊடகவியலாளர் தயாபரனின் கேள்விக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதில் கூறும்போது ஏற்க்கனவே EPRLF செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியாவிலிருந்து வந்திருந்த நபர்கள் ஒருசிலர் கூச்சலிட ஆரம்பித்ததும், அவர்களுக்கு பக்கத்துணையாக அவர்களுடனேயே, அவர் காணப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்ததே..

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், தனக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கவில்லை என்ற கோபத்தில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின், வலது கையாக செயல்படும் திருமதி லலிதா கந்தையா அவர்கள், மேற்படி நினைவேந்தலை குழப்பும் வகையில் கூச்சலிட்டு சண்டித்தனம் செய்ததுடன், “அரசியல்வாதிகளுக்கு கைநீட்டுவோம், (அதாவது சம்பந்தன், சுமந்திரனுக்கு அடிப்போம்)” என விரல்நீட்டி, வாய்ச்சவடால் விட்டதையும், அதனை ஆனந்தி, சிவாஜிலிங்கம் போன்ற வடமாகாண சபை உறுப்பினர்கள் சிரித்தபடியே ரசித்ததும் கண்கூடு.

(இது குறித்த வீடியோ இதோ…)

**யார் இந்த லலிதா கந்தையா??**

24.ஏப்ரல்.1979 இல் பிறந்த திருமதி லலிதா கந்தையா எனும் இவர், சிறுவயதில் புலிகளின் செஞ்சோலை இல்லத்தில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் இவர், தன்னை இப்போது “பெண்ணுரிமைவாதி” எனக் கூறிக் கொள்வதில் தற்பெருமை கொள்பவர்.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் வலதுகரமாக செயல்படும் இவர், தனது சொந்த குடும்ப வாழ்வில் பின்னடைவைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது யாழ். கந்தர்மடத்தில் முன்பள்ளி ஒன்றை நடத்தி வருபவர் எனவும், எப்போதும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின், வலது கையாக செயல்படும் திருமதி லலிதா கந்தையா அவர்கள்,

இவரை மட்டுமல்ல, இன்னும் சில இளைஞர்களையும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களே, அங்கு அழைத்து வந்ததுடன், தான் கூட்டி வந்தவர்களுக்கு கண்ணசைக்க, அவர்களும் தங்கள் பங்கிற்கு குழப்பினார்கள்.

இதுக்கு மறைமுகமாக வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தி அவர்களின் நண்பர், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் துணை போனதாகவும் தெரிய வருகிறது.

இது மட்டுமல்லாது, EPRLF தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களது “பிரத்தியேக செய்தியாளராக” இருக்கும் “சிவ கரன்” என்பவர் தனது முகநூல் மூலம் இந்த குழப்பத்தை பெரிதுபடுத்தி விளம்பரம் செய்வதன் மூலமே, இந்த நிகழ்வுகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

2009 இல் எம்மக்கள் கொத்துக் கொத்தாக, படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தை, கடந்த இரண்டு வருடங்களாகவே இலங்கையில் பகிரங்கத்தில் நினைவு கூற முடிகின்றது. இதுக்கு ஏதோ ஒருவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று உழைத்து உள்ளது என்றால் மிகையாகாது.

ஆயினும் “தமிழ் தேசியக் கூட்டமைப்பில்” உள்ள கையாலாகாதவர்கள் சிலர், தங்களின் பிரச்சினைகளை, இந்த உன்னத நிகழ்வுகளைக் குழப்புவதன் மூலம், கேவலப்படுத்திக் கொச்சைப்படுத்துவது மிகவும் கேவலமான செயல் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

எது எப்படியிருப்பினும் “வலிசுமந்த எம் இனத்தின், தியாகத்தின் மேல் நின்று சவாரி செய்ய, யார் நினைத்தாலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்”. அது சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தி சசிதரன் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் தகுந்த தண்டனை, மக்களால் வழங்கப்படும்.

-“அதிரடி இணையத்துக்காக, வன்னியில் இருந்து கரிகாலன் மற்றும் சேகுவேரா”- (Thanks… ATHIRADY.COM)Post a Comment

Protected by WP Anti Spam