‘கேன்ஸ்’ பட விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யாராய்..!!

Read Time:2 Minute, 57 Second

201705211223299189_ish1._L_styvpfகேன்ஸ் படவிழாவில் புதிய டிசைன் உடைகளை அணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஐஸ்வர்யாராய் ஈர்த்தார்.

‘கேன்ஸ்’ திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘கேன்ஸ்’ நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் உலக சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான ‘கேன்ஸ்’ படவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார்.

அப்போது அவர் சிவப்பு கம்பளத்தில் புதிய கண்கவர் டிசைனுடன் கூடிய உடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்தார். 2 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.

முதல்நாள் விழாவில் ‘சின்ட்ரெல்லா’ போன்று வெளிர்நிற கவுன் உடை அணிந்து ஒரு இளவரசி போன்று நடந்து வந்தார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சர்வதேச போட்டோகிராபர்கள் அவரை படம் பிடித்தனர்.

இந்த உடை மைக்கேல் சின்கோ என்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.

ஒவ்வொரு வருடமும் புதுவிதமான அழகுமிளிரும் வண்ண உடைகளை அணிந்து வந்து கலக்கி வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட மாடல் அழகி ஒருவருக்கு திடீரென ஆடை விலகியது. அது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி பெல்லா ஹகித் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை விலகி பிரச்சினையை ஏற்படுத்தியது.

பெல்லா ஹகித் அணிந்திருந்த கவுனில் உள்ள ‘கட்’ மூலம் அவரது தொடைகள் நன்கு தெரிந்தது. அவர் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்த போதும், நடந்த போதும் ஆடை விலகி அனைவரையும் நெளிய வைத்தது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளாமல் சர்வ சாதாரணமாக சமாளித்து சென்று விட்டார்.

கடந்த ஆண்டும் கேன்ஸ் பட விழாவில் பெல்லா கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற உடை அணிந்து போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தபோதும் அவரது ஆடை விலகியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்..!!
Next post கூட்டு அரசாங்கத்துக்கான அபாய எச்சரிக்கை..!! (கட்டுரை)