By 26 May 2017 0 Comments

விமானத்தில் கழிவறை எவ்வாறு செயல்படுகிறது?..!!

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)நாம் வீட்டில் பயன்படுத்து கழிவறைக்கும், விமானத்தில் பயன்படுத்தப்படும் கழிவறைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

வீட்டில் இருக்கும் கழிவறையில், தண்ணீர் உள்ள ஒரு பவுல் இருக்கும், நாம் கழிவறைக்கு சென்ற பின்னர் தண்ணீரை Flush செய்தால், அந்த பவுல் கழிவுகளை, செப்டிங் டேங்குக்கு எடுத்து செல்கிறது.

ஆனால், விமானத்தில் உள்ள கழிவறையில் அப்படி கிடையாது. விமானத்தில் பயன்படுத்தப்படுவது வெற்றிடமான கழிவறை ஆகும்.

அதில் பவுல் எதுவும் இருக்காது, அப்படியிருக்கையில் எவ்வாறு கழிவுகள் அகற்றப்படுகிறது என்ற சந்தேகம் இருக்கும்.

வெற்றிட கழிவறையின் உட்புறத்தில் ஒரு வடிகுழாய் இருக்கும், நாம் தண்ணீரை Flush செய்யும்போது அந்த வடிகுழாயின் வால்வு திறக்கப்பட்டு கழிவு அகற்றப்படுகிறது.

வீட்டில் பயன்படுத்தும் கழிவறையை விட இந்த வெற்றிட கழிவறை குறைந்த அளவு தண்ணீரையே எடுத்துக்கொள்கிறது. 2 லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

இந்த கழிவறைக்கு சிறிய விட்டம் கொண்ட கழிவுநீர் குழாய்கள் பயன்படுத்தலாம், தண்ணீரை மிச்சப்படுத்தும்.

மேலும், நீங்கள் எந்த பக்கவாட்டில் நின்றபடியும் தண்ணீரை Flush செய்யலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam