ஆஸி: ‘குரோகோடைல் ஹன்டர்’ விபத்தில் பலி

Read Time:1 Minute, 47 Second

steve_irwin.jpgமுதலைகள், மிகப் பெரிய பாம்புகள், சுறா மீன்கள், திமிங்கலங்கள், சிங்கம், புலி என அனைத்து வகையான மிக ஆபத்தான விலங்களை வெறும் கைகளால் அடக்கி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வின் கடலில் நடந்த விபத்தில் பலியாகிவிட்டார். 44 வயதான இர்வின் உலகெங்கும் டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிக், அனிமல் பிளானட் உள்ளிட்ட சேனல்களில் மிகப் பிரபலமானவர். இவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.

வெறும் கைகளோடு ஆபத்தான விலங்குகளை கையாளும் ஸ்டீவ் ‘குரோகோடைல் ஹன்டர்’ என்ற பெயரில் தயாரித்து வந்த டாகுமெண்டரிகள் உலகப் பிரபலமானவை. தனது வீட்டிலேயே மிகப் பெரிய முதலை, பாம்பு பண்ணைகளையும் வைத்துள்ளார். திமிங்கலம், சுறா மீன்கள் மீது சவாரி செய்வது போன்ற ஸ்டண்டுகளையும் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள போர்ட் டக்ளஸ் என்ற இடத்தில் கடலுக்கு அடியில் விலங்குகளை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன்களை குத்த உதவும் ஈட்டி இவரது நெஞ்சில் குத்தியது. கடலுக்கு அடியிலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகி விட்டதாகத் தெரிகிறது.

steve_irwin.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சந்திரன் மீது விண்கலம் மோதியது: பூமிக்கு ஆபத்தா… பரபரப்பு தகவல்கள்
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மவுரஸ்மோ, ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்