By 29 May 2017 0 Comments

விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?..!!

625.56.560.350.160.300.053.800.100.160.90விமானங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன, இதற்கு எப்போதும் மங்காத நிறம் வெள்ளை என்பதே காரணம்.

வெள்ளை நிறமானது புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெயில் அதிகம்பட்டாலும் மங்காது, ஆனால் மற்ற நிறங்களானது வெயிலின் தாக்கத்தால் மங்கிவிடும்.

மேலும் வெள்ளையை தவிர மற்ற நிறங்கள் எளிதில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை, இதனால் அதிகம் சூடாக வாய்ப்புகள் உள்ளது.

வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும், இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.

விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம்.

வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். இதுபோல பல காரணங்கள் விமானம் வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பு அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam