By 4 June 2017 0 Comments

சீக்கிரம் வெள்ளையாகலாம்.. இதை ட்ரை பண்ணுங்க..!!

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3)சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகளை வெளியேற்றி, முகத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் மாற்ற அற்புதமான ஃபேஸ் மாஸ்க் இதோ!

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1
சர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
செய்முறை

ஒரு பௌலில் எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை பவுடர், கற்றாழை ஜெல், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பிரஷ் பயன்படுத்தி தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 30-40 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி, மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

குறிப்பு

இந்த மாஸ்க்கைப் பயன்படுத்திய பின், உடனே வெயிலில் செல்லக் கூடாது.

மேலும் இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை செய்தால் 10 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்மைகள்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் விட்டமின் C, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய மற்றும் ஆரோக்கியமான சரும செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.

கற்றாழையில் உள்ள நொதிகள், சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பிக்க உதவுகிறது.
பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவைப் பராமரிப்பதுடன் இது ப்ளீச்சிங் தோற்றத்தைக் கொடுக்கிறது.



Post a Comment

Protected by WP Anti Spam