திருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை..!!

Read Time:4 Minute, 36 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)உகாண்டாவில், திருமணம் செய்துகொள்ளாமல் கருத்தரிக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டுவருவதாக பார்க்கப்பட்டனர்.

எனவே, அத்தகைய பெண்களை தனியானதொரு தீவுக்கு கொண்டுசென்று அங்கு இறந்துபோக விட்டுவிடுவார்கள். அதில் அதிர்ஷ்டசாலிகளான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அப்படி மீட்கப்பட்ட ஒருவர் இன்றும் உயிர் வாழ்கிறார். அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்

“நான் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்ததை அறிந்து கொண்ட என்னுடைய குடும்பத்தார், ஒரு படகில் என்னை ஏற்றி, அகாம்பேனேவுக்கு (தண்டனை தீவு) கொண்டு சென்றனர். நான்கு நாட்கள் உணவும், குடிநீரும் இன்றி அங்கேயே இருந்தேன்” என்கிறார் மௌடா கயிதாராகாபிவி. அப்போது வயது 12.

“நான் மிகவும் பசியோடு, குளிரோடு இருந்ததை இப்போதும் நினைவுகூர்கிறேன். நான் ஏறக்குறைய செத்து கொண்டிருந்தேன்”.

5ஆம் நாள் அங்கு வந்த மீனவர் ஒருவர், என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

“நான் நம்பவில்லை. என்னை எமாற்றி, தண்ணீரில் தள்ளிவிடதானே அழைக்கிறீர்கள்” என்று நான் அவரிடம் கேட்டேன்”.

மீட்ட கணவர்

“ஆனால், உன்னை என்னுடைய மனைவியாக்கி கொள்ள அழைத்து செல்வதாக கூறி, என்னை இங்கு கொண்டு வந்தார்” என்று மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் அவருடைய கணவரோடு வாழ்ந்த வீட்டின் வராந்தாவில் எளிமையான நாற்காலியில் உட்கார்ந்திருந்த மௌடா கயிதாராகாபிவி.

தண்டனை தீவில் இருந்து புன்யான்னி ஏரிக்கு குறுக்கே 10 நிமிட படகு சவாரி செய்தால் வந்தடைகின்ற தொலைவில் இருக்கின்ற காஷூங்யிரா கிராமத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். இந்த தண்டனை தீவு நீரால் சூழப்பட்ட புற்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும்.

தொடக்கத்தில், அவருடைய பேரனும், சுற்றுலா வழிகாட்டியுமான டைசன் நடாம்விசிகா பிபிசி செய்தியாளர் உள்ளூர் ருகியா மொழியில் பேசியதாக தெரிவித்தது வரை, பேசியன்ஸ் அதுஹைரேயை எப்படி வாழ்த்த வேண்டும் என்று அறியாமல் மௌடா கயிதாராகாபிவி குழம்பியிருந்தார்.

அவருடைய முகம் பல் தெரியாத அளவுக்கு புன்னகை பூத்தது. அவர் என்னுடைய கையை இறுகப்பற்றி கொண்டார். நீண்டகாலம் நிலைக்க வேண்டும் என்ற உறவினர்களைதான் பாகியா மக்கள் இவ்வாறு இறுகப்பற்றி கொள்வது வழக்கம்.

ஒல்லியான உடல் கட்டுடைய மௌடா கயிதாராகாபிவி நேர்த்தியாக காலடிகளை எடுத்து வைத்து நடக்கிறார். அவர் 80 வயதுகளில் இருப்பதாக மதிப்பிடலாம். ஆனால் அவருடைய குடும்பத்தினரோ அவர் அதைவிட வயதானவர் என்று நம்புகின்றனர்.

உகாண்டாவில் பிறப்பு சான்றிதழ்கள் பரவலாகாத நேரத்தில் அவர் பிறந்தார். எனவே, அவருடைய வயதை உறுதி செய்ய முடியவில்லை.

1962 ஆம் ஆண்டு உகாண்டா சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னதாக வழங்கப்பட்ட வாக்காளர் பதிவை அவர் வைத்திருக்கிறார். அதனை வைத்து அவருடைய வயதை நாங்கள் பின்னோக்கி கணக்கிட்டு கொள்கிறோம். அவருக்கு ஏறக்குறைய 106 வயது இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று நடாம்விசிகா தெரிவிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாகத்தின் உச்சக்கட்டம்… தாகம் தீர்க்க வந்த பாம்பின் பரிதாபநிலை..!! (வீடியோ)
Next post முத்தக் காட்சிகளில் நடிப்பது தவறு அல்ல: ரகுல்பிரீத் சிங்..!!