டிரம்பின் வெட்டப்பட்ட தலையுடன் புகைப்படத்துக்கு போஸ்: பரபரப்பை கிளப்பிய நடிகை..!! (வீடியோ)

Read Time:2 Minute, 13 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70டொனால்டு டிரம்பின் வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் போஸ் கொடுத்த அமெரிக்க நடிகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும், பிரபல நடிகையாகவும் இருப்பவர் கேத்தி கிரிஃபின் (56).

இவர் சமீபத்தில் புகைப்பட கலைஞர் டைலர் ஷீல்ட்ஸ் உடன் இணைந்து போட்டோ ஷூட் எடுத்து கொண்டார்.

அதில் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ரத்தம் நிறைந்த வெட்டப்பட்ட பொம்மை தலையுடன் கிரிபின் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பின.

இதை தொடர்ந்து கேத்தி இந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். அவர் கூறுகையில், இந்த புகைப்படங்களுக்கான எதிர்விளைவுகளை நான் கண்டேன். அந்த புகைப்படம் மக்களை எந்தளவு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

கிரிபினின் இந்த செயலுக்காக வருட கணக்கில் போடப்பட்ட அவரது ஒப்பந்தத்தினை சி.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இந்த புகைப்படம் பற்றி டிரம்ப், டுவிட்டரில் கூறுகையில், கிரிபின் தனது செயலுக்காக வெட்கப்பட வேண்டும்.

இந்த புகைப்படத்தினை கண்ட எனது குழந்தைகள், குறிப்பாக 11 வயது நிறைந்த என்னுடைய மகன் வருத்தமடைந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊருக்குள் புகுந்து நான்கு பேரை கொன்ற யானை : தமிழ் நாட்டில் கொடூரம்..!!
Next post மாற்றம் எங்கு தேவை?..!! (கட்டுரை)